0 துவக்கம் 0
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே…
மஞ்சளிலே…ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு ?
அது மன்னவன் பேரு..
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே…
சின்ன கவுண்டர்
இளையராஜா
கே.எஸ்.ரவிக்குமார்
பதிவேற்றம்
மாறிப் போன போதும்
இது தேரு போகும் வீதி.....
வாரி வாரித் தூத்தும் இனி
யாரு உனக்கு நாதி?
பாசம் வைத்ததாலே
நீ பயிரைக் காத்த வேலி..
பயிரைக் காத்த போதும்
வீண் பழியைச் சுமந்த நீதி..
சாமி வந்து கேட்டிடுமா
வீண் பழியைத் தீர்த்திடுமா?
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?
அது மன்னவன் பேரு .
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளியப்போல குணம் படச்ச தென்னவனே..
நெஞ்சம் என்னும் கூடு
அதில் நெருப்பு வைத்ததாரு...?
துன்பம் வந்த போதும் அதைத்
துடைப்பதிங்கு யாரு?
கலங்கும் போது சேறு
அது தெளியும் போது நீரு
கடவுள் போட்ட கோடு அதத்
திருத்தப் போவதாரு?
வெந்த புண்ணும் ஆறிடுமா?
வேதனை தான் தீர்ந்திடுமா?
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?
அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே
பனித் துளியப் போல குணம் படச்ச தென்னவனே
மஞ்சளிலே...ஒரு நூலெடுத்து...
விண்ணுக்கும் மண்ணுக்கும்
சம்மந்தம் உண்டுன்னு சொன்னது யாரு?
அது மன்னவன் பேரு
அந்த வானத்தப் போல மனம் படச்ச மன்னவனே..
பனித் துளியப்போல குணம் படச்ச தென்னவனே