P.B.ஸ்ரீன்வாஸ்
L.R.ஈஸ்வரி
M.S.விஸ்வநாதன்
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்..
ராஜ போகம் தர வந்தாள்…
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த..
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல..
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்...
ராஜ போகம் தர வந்தான்....
தேடிச்சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தா..ல்
என்னை பின்னிக்கொண்டது
பின்னிக்கொண்ட பூங்கொடி தேனை தந்ததது
தேனைத் தந்ததா..ல் இந்த ஞானம் வந்தது..
ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல
விழுந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு
கூடல் கொண்ட தாளம் ஒன்றல்ல
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த....
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்…
ராஜ போகம் தர வந்தாள்..
மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது..
கன்னிப்பெண்ணில் மேனியில்
மின்னல் வந்தது
காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது..
பெண்ணும் பெண்ணல்ல
இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல...
ஊடல் கொண்டு
கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
இடை ஒரு வேதனை
நடை ஒரு வேதனை கொள்ள...
இதழ் ஒரு பாவமும்..
முகம் ஒரு பாவமும் சொல்ல...
ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்...
ராஜ போகம் தர வந்தான்.....