menu-iconlogo
logo

Poove Unnai Nesithen

logo
เนื้อเพลง
ஆ: பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

சொல்லத்தான் வார்த்தையில்லை கண்ணே

உள்ளத்தில் ஓசையில்லை

ஊமைக்கு பாஷையில்லை

கண்மணியே மெளனம்தானே தொல்லை ஹா..

பெ: நீயா என்னை நேசித்தாய்

பூக்கள் கொண்டு பூசித்தாய்

உண்மை சொல்ல யோசித்தாய்

கோழை போல யாசித்தாய்

ஏன் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மையை வெல்ல வேண்டும்

ஆ: தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது

பெ: ஓஹோ (ஆ: ஆ) ஆஹா (ஆ: ஆ) உண்மைதானா

ஆ: ஏழு ஜென்மம் போனாலும்

இந்த பந்தம் போகாது

பெ: நீயா (ஆ: ஆ) சொன்னாய் (ஆ: ஆ)

மெய்யே தானா

ஆ: உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது

பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது

ஆ..

ஆ: பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

பெ: உண்மை சொல்ல யோசித்தாய்

கோழை போல யாசித்தாய்

பெ: காதலுக்கு எப்போதும்

வார்த்தை மட்டும் போதாது

ஆ: கண்ணே உந்தன் எண்ணம் என்ன

பெ: கண்ணடித்தால் தீராது

காதல் இங்கு வாராது

ஆ: என்னை தந்தேன் இன்னும் என்ன

பெ: பெண்மை என்றால்

வீரனுக்கே மாலை தந்துவிடும்

வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்

ஓ...

ஆ: பூவே உன்னை நேசித்தேன்

பூக்கள் கொண்டு பூசித்தேன்

கண்ணில் பாடம் வாசித்தேன்

காதல் வேண்டும் யாசித்தேன்

பெ: ஏன் கண்ணா மீசை மேலே ஆசை

தேனென்றால் சாரம் வேண்டும்

ஆணென்றால் வீரம் வேண்டும்

ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்