menu-iconlogo
logo

Paatukku Patteduthu

logo
Şarkı Sözleri
பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ ஹோய்

துள்ளி விழும் வெள்ளலையே

நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ ஹோய்

துள்ளி விழும் வெள்ளலையே

நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே நீபோய்

தூது சொல்ல மாட்டாயோ

தத்தி வரும் வெள்ளலையே நீபோய்

தூது சொல்ல மாட்டாயோ

கொத்தும் கிளி இங்கிருக்க

கோவைப் பழம் அங்கிருக்க

தத்தி வரும் வெள்ளலையே நீபோய்

தூது சொல்ல மாட்டாயோ

இளம் வாழம் தண்டாக எலுமிச்சம் கொடியாக

இருந்தவளைக் கைப் பிடிச்சு

இரவெல்லாம் கண் முழிச்சு

இல்லாத ஆசையில என் மனச ஆடவிட்டான்

ஆடவிட்ட மச்சானே ஓடம் விட்டு போனானே

ஓடம் விட்டு போனானே ஓஓஓஓஓஓ

ஓடம் விட்டு போனானே

ஊரெங்கும் தூங்கையிலே நான்

உள்மூச்சு வாங்கையிலே

ஓசையிடும் பூங்காற்றே நீதான்

ஓடி போய்ச் சொல்லி விடு

மின்னலாய் வகிடெடுத்து

மேகமாய்த் தலைமுடித்து

பின்னலாய் ஜடைபோட்டு என் மனச எடைபோட்டு

மீன் புடிக்க வந்தவள நான் புடிக்க போனேனே

மை எழுதும் கண்ணாலே போய் எழுதிப் போனாளே

ஆசைக்கு ஆசை வச்சேன்

நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்

ஓசையிடும் பூங்காற்றே நீதான்

ஓடிப்போய் சொல்லிவிடு

வாழைப்பூ திரி எடுத்து

வெண்ணையிலே நெய் எடுத்து

ஏழை மனக் குடிசையிலே ஏத்தி

வச்சான் ஒரு விளக்கு

ஏத்தி வச்ச கைகளிலே என்

மனச நான் கொடுத்தேன்

நெஞ்சு மட்டும் அங்கிருக்க

நான் மட்டும் இங்கிருக்க

நான் மட்டும் இங்கிருக்க

...நான் மட்டும் இங்கிருக்க

தாமரை அவளிருக்க இங்கே

சூரியன் நானிருக்க

சாட்சி சொன்ன சந்திரனே

நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

பாட்டுக்குப் பாட்டெடுத்து

நான் பாடுவதைக் கேட்டாயோ

சாட்சி சொன்ன சந்திரனே

நீ போய் சேதி சொல்ல மாட்டாயோ

P. Susheela, Paatukku Patteduthu - Sözleri ve Coverları