menu-iconlogo
logo

Kadhal Rajiyam Enadhu

logo
Şarkı Sözleri
காதல் ராஜ்ஜியம் எனது

அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு

இதில் மாலை நாடகம் எழுது

காதல் ராஜ்ஜியம் எனது

அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு

இதில் மாலை நாடகம் எழுது

கண்ணான கண்மணி வனப்பு

கல்யாணப் பந்தலின் அமைப்பு

தயவை தவியின் திருமேனி

மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

கண்ணான கண்மணி வனப்பு

கல்யாணப் பந்தலின் அமைப்பு

தயவை தவியின் திருமேனி

மஞ்சள் கொண்டாடும் மாணிக்கச் சிவப்பு

காதல் ராஜ்ஜியம் எனது

அந்த காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு

எந்தன் மார்பில் நீ வந்து உளவு

திங்கள் ஒரு கண்ணில்

குளிர் தென்றல் மறு கண்ணில்

தாலாட்டும் பெண்மை இது

வைகை மலர்பொய்கை

என மங்கை மணிசெங்கை

நீராட்டும் நேரம் இது

ஹாஹா .. திங்கள் ஒரு கண்ணில்

குளிர் தென்றல் மறு கண்ணில்

தாலாட்டும் பெண்மை இது

வைகை மலர்ப்பொய்கை

என மங்கை மனிச்செங்கை

நீராட்டும் நேரம் இது

தென் பாண்டித் தேவனின் அணைப்பு

குத்தாலத் தென்றலின் நினைப்பு

ராஜ லீலைகள் இதுதானோ

உள்ளம் கொள்ளாத ஆனந்த் தவிப்பு

காதல் ராஜ்ஜியம் எனது

அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு

இதில் மாலை நாடகம் எழுது

கொஞ்சும் தமிழ் மூன்றும்

தரும் சந்தம் அதில் தோன்றும்

தானாகப் பாடல் வரும்

தத்தும் கிளி நித்தம்

மணி முத்தம் இடும் சத்தம்

தேனாகக் காதில் விழும்

சிங்கார பொன்மகள் சிரிப்பு

சங்கீத வீணையின் படைப்பு

அழகு ததேவதை அலங்காரம்

கம்பன் சொல்லாத காவியச் சிறப்பு

காதல் ராஜ்ஜியம் எனது

அந்தக் காவல் ராஜ்ஜியம் உனது

இது மன்னன் மாடத்து நிலவு

இதில் மாலை நாடகம் எழுது