ஆ...
ஆ...
கல்லெல்லாம்
மாணிக்க
கல்லாகுமா...
கலையெல்லாம்
கண்கள் சொல்லும்
கலையாகுமா
கல்லெல்லாம்
மாணிக்க
கல்லாகுமா...
கலையெல்லாம்
கண்கள் சொல்லும்
கலையாகுமா
சொல்லெல்லாம்
தூய தமிழ்
சொல்லாகுமா
சுவையெல்லாம்
இதழ் சிந்தும்
சுவை ஆகுமா
சொல்லெல்லாம்
தூய தமிழ்
சொல்லாகுமா
சுவையெல்லாம்
இதழ் சிந்தும்
சுவை ஆகுமா
ஆ...
கல்லெல்லாம்
மாணிக்க
கல்லாகுமா
கலையெல்லாம்
கண்கள் சொல்லும்
கலையாகுமா
கன்னித்தமிழ் தந்ததொரு
திருவாசகம்
கல்லைக்கனி ஆக்கும் உந்தன்
ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு
திருவாசகம்
கல்லைக்கனி ஆக்கும் உந்தன்
ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன்
கண்ணல்லவா
வண்ண
கண் அல்லவா
உண்டென்று சொல்வதுந்தன்
கண்ணல்லவா
வண்ண
கண் அல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன்
இடையல்லவா...
மின்னல் இடையல்லவா
ஆ...
கல்லெல்லாம்
மாணிக்க
கல்லாகுமா
கலையெல்லாம்
கண்கள் சொல்லும்
கலையாகுமா
ஆ...
கம்பன் கண்ட சீதை
உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை
உன் சேயல்லவா
கம்பன் கண்ட சீதை
உந்தன் தாயல்லவா
காளிதாசன் சகுந்தலை
உன் சேயல்லவா
அம்பிகாபதி அணைத்த
அமராவதி
மங்கை அமராவதி
அம்பிகாபதி அணைத்த
அமராவதி
மங்கை அமராவதி
சென்ற பின் பாவலர்க்கு
நீயே கதி
என்றும் நீயே கதி
ஆ...
கல்லெல்லாம்
மாணிக்க
கல்லாகுமா
கலையெல்லாம்
கண்கள் சொல்லும்
கலையாகுமா
ஆ...