menu-iconlogo
logo

Mannil Vantha Nilave

logo
Lời Bài Hát
மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

அன்பு கொண்ட

செல்லக் கிளி

கண்ணில் என்ன கங்கை

நதி சொல்லம்மா

நிலவே……………

மலரே………………

நிலவே மலரே மலரின்

இதழே இதழின் அழகே

எட்டி நிற்கும் வானம்

உன்னைக் கண்ட நேரம்

பக்கம் வந்து தாலாட்டும்

அந்தி மழை மேகம்

இந்த மலர்த் தேகம்

தொட்டு தொட்டு நீராட்டும்

எட்டி நிற்கும் வானம்

உன்னைக் கண்ட நேரம்

பக்கம் வந்து தாலாட்டும்

அந்தி மழை மேகம்

இந்த மலர்த் தேகம்

தொட்டு தொட்டு நீராட்டும்

விழிகளில் கவிநயம்

விரல்களில் அபிநயம்

கண்ணே நீ காட்டு

விடிகிற வரையினில்

மடியினில் உறங்கிடு

பாடல் நீ கேட்டு

நிலவே……………

மலரே………………

நிலவே மலரே மலரின்

இதழே இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

புன்னை இலை போலும்

சின்ன மணிப் பாதம்

மண்ணில் படக் கூடாது

பொன்னழகு மின்னும்

முன்னழகு பார்த்து

கண்கள் படக் கூடாது

புன்னை இலை போலும்

சின்ன மணி பாதம்

மண்ணில் படக் கூடாது

பொன்னழகு மின்னும்

முன்னழகு பார்த்து

கண்கள் படக் கூடாது

மயில்களின் இறகினில்

அழகிய விழிகளை

நீ தான் தந்தாயோ

மணிக் குயில் படித்திடும்

கவிதையின் இசையென

நீ தான் வந்தாயோ

நிலவே……………

மலரே………………

நிலவே மலரே மலரின்

இதழே இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே

என் மடியில் பூத்த மலரே

அன்பு கொண்ட

செல்லக் கிளி

கண்ணில் என்ன கங்கை

நதி சொல்லம்மா

நிலவே……………

மலரே………………

Mannil Vantha Nilave của P. Susheela - Lời bài hát & Các bản Cover