menu-iconlogo
logo

Idhuvum Kadandhu Pogum - Reprise

logo
歌詞
போகும் பாதைகளும்

வாழ்வின் தேவைகளும்

படிப்பினை கொடுத்திடுமே

முடியாத கேள்விகளும்

ஆழ தேடல்களும்

வழிகளை அமைத்திடுமே

மழை காற்றோடு ஓடிச் சென்று நிலம் சேருமே

அது ஏதோ ஓர் சாயல் கொண்டு உயிர் வாழுமே

சுடரி சுடரி

வழிகள் நீதானே

ஒளியாய் மிளிரும்

வெளியும் நீதானே

விளக்காய் மலர்தான்

அடி பூக்காதே

கிழக்கே இருந்தால்

இருள் சேராதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

உனை நீ ரசித்தால்

முழுதாய் வசித்தால்

இதம் தான் இந்த தனிமையே

துயரில் சிரித்தால்

இடரை எதிர்த்தால்

கணமும் ஒரு முழுமையே

சோகத்தால் எதுதான் மாறிடும்

கண்ணீர் விட்டால் செடியாய் பூத்திடும்

என்னாகும் வா வாழ்ந்தே பார்த்திடலாம்

தினம் நீ தேடும் வாழ்க்கை எங்கோ உனை தேடுமே

அது உனக்கான காலம் வந்தால் உன்னை சேருமே

சுடரி சுடரி

முரண்கள் மாறாதே

மனம் தான் தெளிந்தால்

மயக்கம் நேராதே

அழகே சுடரி அடி ஏங்காதே

பரிவின் திணவை வலி தாங்காதே

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

இதுவும் கடந்து போகும்

கடந்து போகும்

கடந்து போகும்

கடந்து போகும்

கடந்து போகும்

கடந்து போகும்

கடந்து போகும்