menu-iconlogo
logo

Happy Indrumudal Happy

logo
歌詞
Happy இன்று முதல் Happy

Happy இன்று முதல் Happy

கோடை மழை மேகத்தை கண்டு

ஆடும் மயிலே வா

ஆடி வரும் தோகையை கையில்

மூடும் அழகே வா

துணை எங்கே…

இதோ இங்கே…

சுகம் எங்கே…

இதோ இங்கே

ஆ…Happy இன்று முதல் Happy

ஆ…Happy இன்று முதல் Happy

தென்றல் தொடாத இலக்கிய காதல்

இதுதான் தெரியாதோ

தென்றல் தொடாத இலக்கிய காதல்

இதுதான் தெரியாதோ

அது தேடிய கனியை

மூடிய துணையை

பகையாய் நினையாதோ

அது தேடிய கனியை

மூடிய துணையை

பகையாய் நினையாதோ

இந்த உறவினில் தடையேது

இந்த பிறவியில் கிடையாது

இந்த உறவினில் தடையேது

இந்த பிறவியில் கிடையாது

பனி ஓடுவதும்

மலை தேடுவதும்

நம்மை பார்த்ததினால் தானே

ஆ…Happy இன்று முதல் Happy

ஆ…Happy இன்று முதல் Happy

அணைப்பேன் மெதுவாக

அச்சம் இதோடு அடங்கட்டும் என்று

அணைப்பேன் மெதுவாக

இனி மிச்சம் மீதி இருந்தாலும்

அது விலகும் பனியாக

இனி மிச்சம் மீதி இருந்தாலும்

அது விலகும் பனியாக

இது தொடரட்டும் சுவையாக

சுகம் படரட்டும் இதமாக

இது தொடரட்டும் சுவையாக

சுகம் படரட்டும் இதமாக

விழி மூடி வர

கனவோடி வர

விளையாடிட அழகாக

ஆ…Happy இன்று முதல் Happy

ஆ…Happy இன்று முதல் Happy

Happy Indrumudal Happy T.M. Soundararajan/P. Susheela - 歌詞和翻唱