logo

Karpoora nayagiye HQ தமிழில்

logo
الكلمات
இசை

பதிவேற்றம்:

கற்பூர நாயகியே கனகவல்லி!

இசை

கற்பூர நாயகியே கனகவல்லி!

காளி மகமாயி கருமாரி அம்மா!

பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா!

பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!

ஆஆ..கற்பூர நாயகியே கனகவல்லி!

காளி மகமாயி கருமாரி அம்மா!

இசை

பதிவேற்றம்:

நெற்றியில் உன் குங்குமமே

நிறைய வேண்டும்!

அம்மா.. நெஞ்சில் உன்

திருநாமம் வழியவேண்டும்!

நெற்றியில் உன் குங்குமமே நிறைய வேண்டும்!

அம்மா.. நெஞ்சில் உன்

திருநாமம் வழியவேண்டும்!

கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!

பாடும்,கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்

அம்மா..கற்பூர நாயகியே கனகவல்லி!

காளி மகமாயி கருமாரி அம்மா!

இசை

பதிவேற்றம்:

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!

கயிறாகி உயிராகி உடலாகினாய்!

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்!

கயிறாகி உயிராகி உடலாகினாய்!

நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!

நிலமாகி பயிராகி உணவாகினாய்!

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!

தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!

தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!

போற்றாத நாளில்லை தாயே உன்னை!

போற்றாத நாளில்லை தாயே உன்னை!

பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை

கற்பூர நாயகியே கனகவல்லி!

காளி மகமாயி கருமாரி அம்மா..

கருமாரி அம்மா..கருமாரி அம்மா

நன்றி

பதிவேற்றம்:

Karpoora nayagiye HQ தமிழில் لـ L. R. Eswari - الكلمات والمقاطع