M: அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள்
அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
அந்தப்புரத்தில் ஒரு மகராணி அவள்
அன்புக்கரத்தில் ஒரு மகராஜன்
கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
F: சாமந்தி பூக்கள் மலர்ந்தன
M: இரு சந்தன தேர்கள் அசைந்தன
F: சாமந்தி பூக்கள் மலர்ந்தன
M: இரு சந்தன தேர்கள் அசைந்தன
F: பாவை இதழ் இரண்டும் கோவை
M: அமுத ரசம் தேவை
F: என அழைக்கும் பார்வையோ
அந்தப்புரத்தில் ஒரு மகராஜன் அவன்
அன்புக்கரத்தில் ஒரு மகராணி
ஆசை கனிந்துவர அவன் பார்த்தான் அன்னம்
தலை குனிந்து நிலம் பார்த்தாள்
M: சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை
சங்கு வண்ண கழுத்துக்கு தங்க மாலை
அவள் சங்கமத்தின் சுகத்துக்கு அந்தி மாலை
F: குங்குமத்தின் இதழ் சின்னம் தந்த காலை
அவன் கொள்ளை கொள்ள துடித்தது என்ன பார்வை
M: அது பார்வையல்ல பாஷை என்று
கூறடி என்றான்
F: அந்தபுரத்தில் ஒரு மகராஜன் அவன்
அன்புக்கரத்தில் ஒரு மகராணி
M: கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
M: முத்துச்சிப்பி திறந்தது
விண்ணை பார்த்து
F: மழை முத்து வந்து விழுந்தது
வண்ணம் பூத்து
M: முத்துச்சிப்பி திறந்தது
விண்ணை பார்த்து
F: மழை முத்து வந்து விழுந்தது
வண்ணம் பூத்து
M: நித்தம் ஒன்று வளர்ந்தது
முத்தம் கேட்டு
F: அவள் நெஞ்சில் வந்து
பிறந்திடும் தொட்டில் போட்டு
Both: அங்கு தென்பொதிகை தென்றல்
வந்து ஆரிரோ பாடும்
F: அந்தபுரத்தில் ஒரு மகராஜன் அவன்
அன்புக்கரத்தில் ஒரு மகராணி
M: கண்கள் சிவந்திருக்க அவள் பார்த்தாள்
காமன் திருச்சபைக்கு வழி கேட்டாள்
F: ஆராரிரோ
M: ஆராரி..ராரிரோ
F: ராரி ராரோ ஆராரிரோ
M: ஆராரிரோ
F: ஆராரிரோ
M: ஆராரிரோ
F: ஆராரிரோ