பாலக்காட்டு பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு
அப்பாவி ராணி
அவ சேலைக் கட்ட பாத்தா போதும்
அம்மாமி பாணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா
பாலிருக்கும் பழமிருக்கும்
பள்ளி அறையிலே
அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும்
சாந்தி முகூர்த்தம்
சாந்தி என்றால் என்னவென்று
ராணியை கேட்டாராம்
ராணி தானும் அந்த கேள்வியையே
ராஜாவை கேட்டாளாம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
அவர் படித்த புத்தகத்தில்
சாந்தி இல்லையே
இந்த அனுபவத்தை சொல்லித் தர
பள்ளி இல்லையே
கவிதையிலும் கலைகளிலும்
பழக்கமில்லையே
அவர் காதலிக்க நேற்று வரை
ஒருத்தி இல்லையே
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பூக்களிலே வண்டுறங்கும்
பொய்கையை கண்டாராம்
தேவி பூஜையிலே ஈஸ்வரனின்
பள்ளியை கண்டாராம்
மரக்கிளையில் அணில் இரண்டு
ஆடிடக் கண்டாராம்
ராஜா மனதுக்குள்ளே புதியதொரு
அனுபவம் கொண்டாராம்
ஏனம்மா அது ஏனம்மா
ஏனம்மா அது ஏனம்மா
பரமசிவன் சக்தியை
ஓர் பாதியில் வைத்தார்
அந்த பரமகுரு ரெண்டு பக்கம்
தேவியை வைத்தார்
பாற்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தார்
ராஜா பத்மநாபன் ராணியை தன்
நெஞ்சினில் வைத்தார்
யாரம்மா அது நானம்மா
யாரம்மா அது நானம்மா
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு
அப்பாவி ராஜா
அவர் பழக்கத்திலே குழந்தையை போல்
ஒரு அம்மாஞ்சி ராஜா
பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு
அப்பாவி ராணி
அவ சேலைக் கட்ட பாத்தா போதும்
அம்மாமி பாணி
யாரம்மா அது யாரம்மா
யாரம்மா அது யாரம்மா