முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றே..ன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றே..ன்ன்
வேலன் என்றால் வீரம் வரும்
கந்தன் என்றால் கருணை தரும்
வேலன் என்றால் வீரம் வரும்
கந்தன் என்றால் கருணை தரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஷண்முகனை சரணடைந்தால்
சங்கீதம் பாட வரும்
ஆறுபடை வீட்டில் ஓடி விளையாடும்
ஸ்வாமிநாதனே சரவணனே
ஆறுபடை வீட்டில் ஓடி விளையாடும்
ஸ்வாமிநாதனே சரவணனே
ஆறு முகம் கொண்டு ஆறுதல் தந்து
கோடி நலம் காட்டும் குருபரனே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றே..ன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பாரதத்தாய் மடியினிலே
பண்புடனே தவழுகிறேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்...
பைந்தமிழில் பாடுகின்றேன்
பழமையெல்லாம் நினைவூட்டும்...
பைந்தமிழில் பாடுகின்றேன்
கால வரலாறு போற்றிப்புகழ்பாடும்
கவிதை யாவுமே தனித்தமிழே
கால வரலாறு போற்றிப்புகழ்பாடும்
கவிதை யாவுமே தனித்தமிழே
நாளும் முறையோடு நன்மை பல தேடி
வாழ வழி கூறும் திருக்குறளே
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
தித்திக்கும் குமரன் பெயரில்
தெய்வீக அழகை கண்டேன்
முத்தமிழில் பாட வந்தேன்
முருகனையே வணங்கி நின்றேன்