திரைப் படம்: வசந்த மலர்கள் (1992)
குரல்கள்: S P பாலசுப்ரமணியம்
பாடல்: வாலி
இசை: தேவா
இயக்கம்: A R ரமேஷ்
EDITIING BY VKS,,,,KARUNA,,FROM,,BATTICALOA
SRI LANKA
–
———————-
–
பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்
நல் வாழ்த்துக்கள் அதில் நானும் கூறுவேன்
காலம் உள்ள காலம் வரை இந்த கானமழை
எந்தன் கை தொட்ட பெண்ணுக்குத்தான்
பாடும் இந்த ராகங்களும் இன்பத் தாளங்களும்
வண்ண மையிட்ட கண்ணுக்குத்தான்
மாலை வந்த பூங்காற்றும் தேன் பாட்டும் கல்யாண மாலை கட்டும்
–
இளகிய பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்
VKS,,KARUNA,,FROM,,BATTICALOA
SARANAM,,,,01
–
நான் இசைக்கும் பாடலுக்கு ஜீவன் உண்டு கண்மணியே
பாடலெல்லாம் ஏடெடுத்து நான் தொடுத்த பொன்மணியே
ஊறிவரும் எல்லை மீறி வரும் எண்ணம் ஒன்றல்ல நூறாகும்
எண்ணங்களில் அதன் வண்ணங்களில் உள்ள அர்த்தங்கள் நீயாகும்
–
என்னருகில் நீயிருந்தால் வானவில்லை நான் வளைப்பேன்
கற்பனையில் நான் மிதந்து வெண்ணிலவில் கால் பதிப்பேன்
தேனென்று நான் சொல்லும் கானம் இசை தேவதை நீ தந்த தானம்
–
பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்
VKS,,KARUNA,,FROM,,BATTICALOA
SARANAM''02
–
பால்நிலவில் ராத்திரியில் பாடுகின்றேன் பல்லவியை
பல்லவிக்கு சரணம் இங்கே தேடுகின்றேன் பைங்கிளியே
காத்திருக்க கண்கள் பூத்திருக்க அன்பு காதலி எங்கேயோ
ஊர் முழுக்க சுற்றும் கார்முகிலே அந்த கன்னியை கண்டாயோ
என்னுடைய வீணையிலே மீட்டுகின்ற தந்தியவள்
என்னுடைய தோட்டத்திலே நீந்துகின்ற தென்றலவள்
மோகங்கள் தந்தவள் வேண்டும் இல்லை ராகங்கள் எப்படி தோன்றும்
–
பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்
நல் வாழ்த்துக்கள் அதில் நானும் கூறுவேன்
காலம் உள்ள காலம் வரை இந்த கானமழை
எந்தன் கை தொட்ட பெண்ணுக்குத்தான்
பாடும் இந்த ராகங்களும் இன்பத் தாளங்களும்
வண்ண மையிட்ட கண்ணுக்குத்தான்
மாலை வந்த பூங்காற்றும் தேன் பாட்டும் கல்யாண மாலை கட்டும்
–
இளகிய பொன் மாலையில் தமிழ் கீதம் பாடுவேன்
நல் வாழ்த்துக்கள் அதில் நானும் கூறுவேன்
VKS,,KARUNA,,FROM,,BATTICALOA,,,,SRI LANKA
–