ஆ: எதுத்த வீட்டு ஜோடியை போல்
இன்பமாக இருப்போம்முன்னு
நினைச்சிருந்தேன் பொன்மயிலே
நான் இஷ்டப்பட்டு பக்கம் வர
இடம் போனா வலம் போற
வலம் போனா இடம் போற
வெக்கத்தவிட்டு சொல்லுறேன்
மக்கரோ மக்கர் பண்ணுற
ஏல அழகம்மா என்ன
பாத்தா இளப்பமா
ஆ: ஏல அழகம்மா என்ன பாத்தா இளப்பமா
ஏல அழகம்மா என்ன
பாத்தா இளப்பமா
மினிக்கி குழுக்குற என்னத்துக்கு தழுக்கமா
ஏல அழகம்மா என்ன
பாத்தா இளப்பமா
மினிக்கி குழுக்குற என்னத்துக்கு தழுக்கமா
பார்த்தாலும் பார்ப்பேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்ன போல பார்த்தது இல்லையடி
காத்தாடும் ரோசா
கொத்தோடு முள்ளு
குத்தாம பூவெடுக்க முடியவில்லையடி
முடியவில்லையடி..ஏ ..
பெ: பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப இழப்பமா
பொம்பளைங்க பொழைப்பெல்லாம்
நீங்க பண்ணுற குழப்பம்தான்
பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப இழப்பமா
பொம்பளைங்க பொழைப்பெல்லாம்
நீங்க பண்ணுற குழப்பம்தான்
ஆ: கருத்து இருந்தாலும்
ரொம்ப உறுத்து உள்ளவந்தான்
என்ன வெறுத்து ஒதுக்குறியே
ரொம்ப முறுக்கு காட்டுறியே
பெ: ஹா ஹா ஹான் ஹான்
எதுக்கு எடுத்தாலும்
கண்ண வெட்டி முழிக்கிரையே
எட்டி கைய புடிக்கரையே
தொட்டு கட்டியணைக்கரையே
ஆ: இழுத்து அறைகிற மஞ்சளபோல்
என் மனச அரைக்கிறியே
இடுப்பு கட்டுன
கொசுவை சேலையில்
பின்னி முடிக்கிரையே
பெ: முறுக்கி நிக்கற
கருப்பு மீசையை போல்
கன்னத்தில் குத்துரையே
அரிசி குத்துற சாக்குல
துள்ளுற இடுப்ப ஒடிக்கரையே
ஆ: வேணும்னே உசுப்பி விட்டு
வேடிக்கை பார்க்கிற ராசாத்தி
உள்ளுக்குள்ள ஒன்னு
வெளியில ஒன்னு வேணாண்டி
பெ: பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப இழப்பமா
பொம்பளைங்க பொழைப்பெல்லாம்
நீங்க பண்ணுற குழப்பம்தான்
பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப இழப்பமா
பொம்பளைங்க பொழைப்பெல்லாம்
நீங்க பண்ணுற குழப்பம்தான்
பார்த்தாலும் பார்ப்பேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்ன போல பார்த்தது உண்டா
காத்தாடும் ரோசா
கூத்தாடும் போது
தோதாக நீ எடுத்து
சொருகனதுண்டா சொருகனதுண்டா
ஆ: ஏல அழகம்மா என்ன பாத்தா இளப்பமா
மினிக்கி குழுக்குற என்னத்துக்கு தழுக்கமா
ஏல அழகம்மா என்ன
பாத்தா இளப்பமா
மினிக்கி குழுக்குற என்னத்துக்கு தழுக்கமா
பெ: வீட்டில் இருந்தாலும் அது
விட்டு வெளியில தான்
இந்தக் கன்னிப் பொண்ணு மனசு
அட கண்டபடி சுத்துது
ஆ: ம் ஹா ஹான் ம் ஹான்
காட்டிலே இருந்தாலும்
நம்ம வீட்டுக்குள்ள உன்னதான்
சுத்தி சுத்தி வருகுதடி
இந்த செங்கிப்பய மனசு
பெ: சக்தி கழுவுற சாத வடிக்கிற
வேலை நடக்கலையே
கோழி அடிக்கிற
குழம்பு வைக்கிறேன்
வாசம் அடிக்கலையே
ஆ: சமஞ்சிருக்கிற
தங்கம் இருக்கையில்
சமைச்சது என்னத்துக்கு
வாலிப பசிக்கு சட்டியில்
சோறு செஞ்சி
காட்டுவது என்னத்துக்கு
பெ: சாடையா நான்
புரிஞ்சுகிட்டேன் தெரிஞ்சுகிட்டேன்
பார்வையில அங்கும் இங்கும்
கிள்ளுரையே ராசாவே
ஆ: ஏல அழகம்மா என்ன பாத்தா இளப்பமா
மினிக்கி குழுக்குற என்னத்துக்கு தழுக்கமா
பெ: பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப இழப்பமா
பொம்பளைங்க பொழைப்பெல்லாம்
நீங்க பண்ணுற குழப்பம்தான்
ஆ: பார்த்தாலும் பார்ப்பேன் ஆத்தாடி ஆத்தா
சத்தியமா உன்ன போல பார்த்தது இல்லையடி
பெ: காத்தாடும் ரோசா
கூத்தாடும் போது
தோதாக நீ எடுத்து
சொருகனதுண்டா சொருகனதுண்டா
ஆ: ஏல அழகம்மா என்ன பாத்தா இளப்பமா
மினிக்கி குழுக்குற என்னத்துக்கு தழுக்கமா
பெ: பொண்ணுன்னா உங்களுக்கு
ரொம்ப ரொம்ப இழப்பமா
பொம்பளைங்க பொழைப்பெல்லாம்
நீங்க பண்ணுற குழப்பம்தான்
Thank You - Prakash 31.