பாடல் : ஒத்த ரூபா தாரேன்,
படம் : நாட்டுப்புற பாட்டு,
இசை : இளையராஜா,
பாடியவர்கள் : அருண் மொழி, தேவி
பாடல் வரிகள்: கஸ்தூரி ராஜா
ஆண்: ஒத்த ரூவாயும் தாரேன்
ஒரு ஒன்னப்ப தட்டும் தாரேன்
ஓத்துக்கிட்டு வாடி
நாம ஓட பக்கம் போவோம்
பெண்: ஒத்த ரூவாயும் வேணாம்
உன் ஒன்னப்ப தட்டும் வேணாம்
ஒத்துகிற மாட்டேன்
நீ ஒதுங்கி.. நில்லு மாமோய்
பாடலை தமிழில்
வழங்குவது:
தென்றலின் இசை
ஆண்: ஏ பத்து ரூவாயும் தாரேன்
ஒரு பதக்கன் சங்கிலி தாரேன்
பச்சைக்கிளி வாடி
நல்ல படப்பு பக்கம் போவோம்
பெண்: ஏ பத்து ரூவாயும் வேணாம்
உன் பதக்கன் சங்கிலியும் வேணாம்
பசப்பி நிக்குற மாமா
என்ன உசுப்பி விட வேணாம்
பாடல் தமிழ்வரி உதவி:
கா.உ.சந்தானம்
ஆண்: நான் மச்சு வீடு தாரேன்
பஞ்சு மெத்த போட்டு தாரேன்
மத்தியான நேரம்
அடி மாந்தோப்புக்கு போவோம்
பெண்: அட மச்சு வீடு வேணாம்
உன் பஞ்சு மெத்தையும் வேணாம்
மல்லுக்கு நிக்குற மாமா
உன் சொல்லுக்கு மயங்க மாட்டேன்
இந்த பாடல் உங்களுக்கு
பிடித்திருந்தால் ஐ அழுத்துங்கள்
ஆண்: ஏய் நஞ்சையும் புஞ்சையும் தாரேன்
நாலு தோட்டம் எழுதி தாரேன்
தண்ணிக்கு போறது போல கன்னி
கொளத்துப் பக்க வாடி
பெண்: உன் நஞ்ச புஞ்சையும் வேணாம்
நாலு தோட்டம் தொரவும் வேணாம்
கணக்கு பண்ணுற மாமா உன்
கண்ணுக்கு சிக்க மாட்டேன்
ஆண்: சொத்து பூரா தாரேன் சாவி
கொத்தும் கையில தாரேன்
பத்தர மணிக்கு மேல நீ
வெத்தல காட்டுக்கு வாடி
பெண்: சொத்து சுகம் வேணாம்
என் புத்தி கேட்ட மாமா
உன் மஞ்ச தாலி போதும்
உன் மடியில நான் வாறன்...