ஆ: முன்ன பின்ன தொட்டதில்ல
️அடி தொட்டத நான் விட்டதில்ல
ஒன்னுக்குள்ள ஒன்னுக்குள்ள
நாம ஒட்டிக்கிட்டா குத்தமில்ல..
பெ: என்னான்னு ஏதுன்னு ராசா.. ராசா..
என்னோடு உட்காந்து பேசு..
எம்மேணி வேர்க்காமல் ஈரக்காத்தா
இப்போது சில்லுன்னு.. வீசு..
ஆ: பூட்டி வச்ச பூ இதழ் திறந்து
ஊத்திக்கோடு வாலிப விருந்து..
பெ: கொடுக்கவா... எடுக்கவா...
அம்மம்மா ️ராத்திரி ஆகிடனும்
ஆ: சிங்கார கண்ணுக்கு மை கொண்டு வா..
நந்தலாலா
ஏ நந்தலாலா..ஆஹ..ஆஹ..
பெ: செந்தூரபூவுக்கு சீர் கொண்டு வா..
நந்தலாலா ஏ...நந்தலாலா...
ஆ: தேன்பாலா…. வந்தாளா….
பெ: மாமுலா…. தந்தாளா…...
ஆ: ஒன்னாச்சி தோளோடு தோளா
இப்ப வந்தாச்சு என் கும்பமேளா..
பெ: மே..னிதான் ஊ..ஞ்சலா
ஆ பெ: சிங்கார கண்ணுக்கு
மை கொண்டு வா.. நந்தலாலா
ஏ நந்தலாலா...