menu-iconlogo
logo

Karuvella Kaatukkulae

logo
Letras
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:பொற்காலம்

பாடல்:கருவேலங் காட்டுக்குள்ள

இசை:தேனிசை தென்றல் தேவா

ஆண்குரல்:அருண்மொழி

பெண்குரல்1:அனுராதா ஸ்ரீராம்

பெண்குரல்2:சுஜாதா மோகன்

பெண்1:கருவேலங் காட்டுக்குள்ள...

கட்டி வெச்ச கூட்டுக்குள்ள...

கானாங்குருவி ரெண்டு...

என்ன பேசுது...

அட என்ன பேசுது...

( இசை )

பெண்1:கருவேலங் காட்டுக்குள்ள...

கட்டி வெச்ச கூட்டுக்குள்ள...

கானாங்குருவி ரெண்டு...

என்ன பேசுது...

அட என்ன பேசுது...

( இசை )

பெண்1:முள்ளு வெட்ட வந்த...

முத்தம்மாளுக்கும்...

வெறகு வெட்ட வந்த...

வேளார் மயனுக்கும்...

( இசை )

பெண்1:பொருத்தம் நல்ல...

பொருத்த முன்னு புரளி பேசுது...

சும்மா புரளி பேசுது...

ஆண்:கருவேலங் காட்டுக்குள்ள...

கட்டி வெச்ச கூட்டுக்குள்ள...

கானாங்குருவி ரெண்டு...

என்ன பேசுது...

அட என்ன பேசுது...

முள்ளு வெட்ட வந்த...

முத்தம்மாளுக்கும்...

வெறகு வெட்ட வந்த...

வேளார் மயனுக்கும்...

ஒரசல் என்ன ஒரசலின்னு...

பொரணி பேசுது...

சும்மா பொரணி பேசுது...

நண்பர்கள் அனைவருக்கும்

இந்த பாடல் புதிய SHQ தரத்தில் பதிவேற்றம்

செய்து உள்ளேன் பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண்1:ஈசானி மூலையில...

ஊசி மழை பெய்யயில...

குருவி ரெண்டும்...

ரெக்கக்குள்ள கூத காயுமே......

ஈசானி மூலையில...

ஊசி மழை பெய்யயில...

குருவி ரெண்டும்...

ரெக்கக்குள்ள கூத காயுமே...

நாம கூது காய்ஞ்சதுண்டா...

என்று குத்தி பேசுது...

குருவி குத்தி பேசுது...

ஆண்:கோடை மழை புடிச்சாலும்...

அட கூத காத்து அடிச்சாலும்...

புடிக்காத குருவிகிட்ட...

பொட்ட கூடுமா...

இது பொம்பளைக்கு...

புரியலைன்னு பொரணி பேசுது...

குருவி பொரணி பேசுது...

பெண்1:ஆ.. சோடியோடு...

பாடி ஆட...

ஓடி ஓடி...

வந்த போது...

சண்ட போட்ட குருவியின்னு...

சாட பேசுது...

பெண்2:கூடு யாரு கூடு என்றும்...

சோடி எங்கு கூடுமென்றும்...

கொஞ்ச நாளில் தெரியுமென்று...

குருவி பேசுது...

பெண்1:கருவேலங் காட்டுக்குள்ள...

கட்டி வெச்ச கூட்டுக்குள்ள...

கானாங்குருவி ரெண்டு...

என்ன பேசுது...

அட என்ன பேசுது...

நண்பர்கள் அனைவருக்கும்

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண்1:சோலையன் காட்டுக்குள்ள...

சோளம் கொத்தி திங்கையில...

மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள...

முத்தம் தருமே.......

சோலையன் காட்டுக்குள்ள...

சோளம் கொத்தி திங்கையில...

மூக்கும் மூக்கும் மோதிக்கொள்ள...

முத்தம் தருமே...

நாம முத்தம் தந்த துண்டா...

என்று மொனகி பேசுது...

குருவி மொனகி பேசுது...

ஆண்:முத்து சோளம் திங்கையிலே...

அட முத்தம் கித்தம் தந்துக்கிட்டா...

சோளத் துண்டு சிக்கிக்கிட்டு...

தொண்ட விக்குமே ஹ...

இத பொட்டச்சிக்கு சொல்லச் சொல்லி...

குத்தி பேசுது...

குருவி குத்தி பேசுது...

பெண்1:அஹ..அத்து வன...

காட்டுக்குள்ள...

ஒத்த வாயி...

தண்ணி கேட்டா...

முள்ளு காட்டு குருவியின்னு...

லொள்ளு பேசுது...

பெண்1:காடு வெட்டும் சாக்க வச்சு...

கூடு வெட்ட கூடாதுன்னு...

பாடுபட்ட குருவி ஒன்னு...

பதறி பேசுது...

ஆண்:கருவேலங் காட்டுக்குள்ள...

கட்டி வெச்ச கூட்டுக்குள்ள...

கானாங்குருவி ரெண்டு...

என்ன பேசுது...

அட என்ன பேசுது...

பெண்1:முள்ளு வெட்ட வந்த...

முத்தம்மாளுக்கும்...

வெறகு வெட்ட வந்த...

வேளார் மயனுக்கும்...

பொருத்தம் நல்ல...

பொருத்தமுன்னு புரளி பேசுது...

சும்மா புரளி பேசுது...

கருவேலங் காட்டுக்குள்ள.....

ஏ..ஏ.....