பாடிவயர்கள் : அருண்மொழி – உமா ரமணன்
இசை : இளையராஜா
ஆ: காதல் நிலாவே பூவே..
கை மீது சேரவா..
ஆசைக் கனாவே வாழ்வே..
ஆவல்கள் தீரவா..
மணி ஊஞ்சல் தானாட..
அதன் மேலே.. நான் ஆட..
இள மாலை.. நேரம் தான்..
பெ: காதல் நிலாவே பூவே..
கை மீது சேரவா..
ஆசைக் கனாவே.. வாழ்வே..
ஆவல்கள் தீரவா..
ஆ: ஏட்டில் ஒரு பாவலன்.. எழுதாத காவியம்..
நாட்டில் ஒரு தூரிகை.. புனையாத ஓவியம்..
பெ: மீன் வளர்க்கும்.. என்
கண்.. தேடுதுன் சொந்தம்..
தேன் வளர்க்கும்.. என்
வாய் பாடுதுன் சந்தம்..
ஆ: நீராடும் ஓடையே..
எனக்கென குளிர் சேர்க்கும் வாடையே..
மோகம் எந்நாளும் என்னை வாட்டுதே..
அன்பே.. வா...ஆ..
பெ: காதல் நிலாவே பூவே..
கை மீது சேரவா..
ஆசைக் கனாவே.. வாழ்வே..
ஆவல்கள் தீரவா..
மணி ஊஞ்சல் தானாட..
அதன் மேலே.. நான் ஆட..
இளமாலை.. நேரம் தான்..
ஆ: காதல் நிலாவே பூவே..
கை மீது சேரவா..
பெ: நாளும் உனைக் கூவிடும்..
துயிலாத பூங்குயில்..
நீயும் எனை வாட்டினால்..
உறவேது பூமியில்..
ஆ: நான் விரும்பும்.. பொன் மான்..
தாமரை நெஞ்சம்..
நாள் முழுக்க.. என் மேல்
சாய்ந்திடக் கெஞ்சும்..
பெ: சேராது உன்மடி தனிமையில்
தூங்காது பூங்கொடி..
கூடும் சந்தோஷம்.. இன்று
வாய்த்ததே அன்பே வா..ஆ..
ஆ: காதல் நிலாவே பூவே..
கை மீது சேரவா..
ஆசைக் கனாவே.. வாழ்வே
ஆவல்கள் தீரவா..
பெ: மணி ஊஞ்சல் தானாட..
அதன் மேலே.. நான் ஆட..
இளமாலை.. நேரம் தான்..
ஆ: காதல் நிலாவே பூவே..
கை.. மீது சேரவா..
பெ: ஆசைக் கனாவே வாழ்வே
ஆவல்கள் தீரவா..