menu-iconlogo
logo

Intha Maan

logo
Letras
பெ:இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்து தான் சிந்து பாடும்

பெ:இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்து தான் சிந்து பாடும்

ஆ:சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே...

சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே...

பெ:இந்த மான் உந்தன் சொந்த மான்

பக்கம் வந்த மான்

ஆ:வேல் விழி போடும் தூண்டிலே

நான் விழலானேன் தோ...ளிலே

பெ:நூலிடை தேயும் நோயிலே

நான் வரம் கேட்கும் கோயிலே

ஆ:அன்னமே...ஆ...ஆ...ஆ...

அன்னமே எந்தன் சொர்ணமே

உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே

கன்னமே மது கிண்ணமே

அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே

பெ:எண்ணமே தொல்லை பண்ணுமே

பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே

பெ:இந்த மான் உந்தன் சொந்த மான்

ஆ:பக்கம் வந்து தான் சிந்து பாடும்

பெ:சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

ஆ:கண்மணியே...

பெ:சந்திக்க வேண்டும் தேவனே

ஆ:என்னுயிரே...

இசை

பெ:பொன்மணி மேகலை ஆடுதே

உன் விழிதான் இடம் தேடுதே

ஆ:பெண் உடல் பார்த்ததும் நாணுதே

இன்பத்தில் வேதனை ஆனதே

பெ:என்னத்தான்...ஆ...ஆ...ஆ...

என்னத்தான் உன்னை எண்ணிதான்

உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான்

சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான்

என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான்

ஆ:மோகம் தான் சிந்தும் தேகம் தான்

தாகத்தில் நான் நிற்க ஆனந்தம்தான்

ஆ:இந்த மான்

பெ:உந்தன் சொந்த மான்

ஆ:பக்கம் வந்து தான்

பெ:சிந்து பாடும்

பெ:இந்த மான்

ஆ:எந்தன் சொந்த மான்

பெ:பக்கம் வந்து தான்

ஆ:சிந்து பாடும்

பெ:சிந்தைக்குள் ஆடும் ஜீவனே

ஆ:கண்மணியே...

ஆ:சந்திக்க வேண்டும் தேவியே

பெ:என்னவனே...

நன்றி

Intha Maan de Ilayaraja/K. S. Chithra - Letras y Covers