menu-iconlogo
logo

Sorgame Endralum

logo
Letras
ஆண் : ஏ.. தந்தன தந்தன தந்தா..

சொர்க்கமே என்றாலும் அது

நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக்கீடாகுமா

பல தேசம் முழுதும் பேசும்

மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

சொர்க்கமே என்றாலும் அது

நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக்கீடாகுமா...

பெண் : ஏரிக்கரை காத்தும்

ஏலேலேலோ பாட்டும்

இங்கே ஏதும் கேட்கவில்லையே

ஆண் : பாடும் குயில் சத்தம்..

ஆடும் மயில் நித்தம்

பார்க்க ஒரு சோலையில்லையே

பெண் : வெத்தலைய மடிச்சு

மாமன் அதைக் கடிச்சு

துப்ப ஒரு வழியில்லையே

ஆண் : ஓடி வந்து குதிச்சு

முங்கி முங்கிக் குளிச்சு

ஆட ஒரு ஓடையில்லையே

பெண் : இவ்வூரு என்ன

ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு

ஆண் : அட ஓடும் பல காரு..

வீண் ஆடம்பரம் பாரு

பெண் : ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

ஆண் : சொர்க்கமே என்றாலும்

அது நம்மூரைப் போல வருமா

அட எந்நாடு என்றாலும் அது

நம் நாட்டுக்கீடாகுமா

பெண் : பல தேசம் முழுதும் பேசும்

மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

சொர்க்கமே என்றாலும் அது

நம்மூரைப் போல வருமா

ஆண் : அட எந்நாடு என்றாலும்

அது நம் நாட்டுக்கீடாகுமா...

பெண் : தனதந்த தந்தன தந்தா..

தனதந்த தந்தன தந்தா..

தனதந்த தந்தன தந்தா..

தனதந்த தந்தன தந்தா..

தந்தான நா..நா தனதந்த நா..நா....

ஆண் : மாடு கண்ணு

மேய்க்க.. மேயிறதப் பாக்க

மந்தைவெளி இங்கு இல்லையே

பெண் : ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட

அரச மர மேடை இல்லையே

ஆண் : காளை ரெண்டு பூட்டி

கட்டை வண்டி ஓட்டி

கானம் பாட வழியில்லையே

பெண் : தோழிகளை அழைச்சு

சொல்லிச் சொல்லி ரசிச்சு

ஆட்டம் போட முடியலையே

ஆண் : ஒரு எந்திரத்தை போல

அட இங்கே உள்ள வாழ்க்கை

பெண் : இதை எங்கே போயி

சொல்ல.. மனம் இஷ்டப்படவில்லை

ஆண் : நம்மூரைப் போல ஊரும் இல்லை

பெண் : சொர்க்கமே என்றாலும்

அது நம்மூரைப் போல வருமா

ஆண் : அட எந்நாடு என்றாலும்

அது நம் நாட்டுக்கீடாகுமா

பெண் : பல தேசம் முழுதும் பேசும்

மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா

ஆண் : சொர்க்கமே என்றாலும்

ஆ பெ : அது நம்மூரைப் போல வருமா

ஆண் : அட எந்நாடு என்றாலும்

ஆ பெ : அது நம் நாட்டுக்கீடாகுமா

Sorgame Endralum de Ilayaraja/S. Janaki - Letras y Covers