ஆ: மஞ்சள் பூசும்
மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி..
கொஞ்சிப்பேசி
கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி
வாசப்பூவின் தேனே..
வண்ண நிலாவே
மானே..
காவல் ஏது
கட்டுக்கள் ஏது
காட்டாறு பாயும்போது..
மஞ்சள் பூசும்
மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி
கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி
பெ: நீயில்லாது
நித்திரை ஏது
பாயில் வாடும்
பைங்கிளி
நீயிருந்தால்
சித்திரைக்கூட
வாடைவீசும் மார்கழி
ஆ: நீயில்லாது
நித்திரை ஏது
பாயில் வாடும்
பைங்கிளி
நீயிருந்தால்
சித்திரைக்கூட
வாடைவீசும் மார்கழி
பெ: மாதம் தேதிப் பார்த்து
காதல் பூக்காது
நீரை மீனும் சேர
ஊரைக் கேட்காது
ஆ: பருவ ராகம் பாட..
புதிய கோலம் போட
ஆதியந்தம் அனைத்தும் சொந்தம்
நீங்காது கூடும் போது..
பெ: மஞ்சள் பூசும்..
மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
கொஞ்சிப்பேசி
கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி
வாசப்பூவின் தேனே..
வண்ண நிலாவே மானே
காவல் ஏது
கட்டுக்கள் ஏது
காட்டாறு பாயும்போது
மஞ்சள் பூசும்..
மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி..
ஆ: நாலு பேர்கள்
கண்படக்கூடும்
நீயும் நானும்
கூடினால்
ராஜயோகம்
கைவரும் இன்று
தோளில் தோகை
ஆடினால்..
பெ: நாலு பேர்கள்
கண்படக்கூடும்
நீயும் நானும்
கூடினால்
ராஜயோகம்
கைவரும் இன்று
தோளில் தோகை
ஆடினால்
ஆ: தேவன் எந்தன் ஜீவன்
தேவி உன்னோடு
மானின் கால்கள் போகும்
மாமன் பின்னோடு
பெ: வாழும் நாட்கள்
யாவும்
உன்னுடன்
வாழவேண்டும்
சொந்தம் என்று
பந்தங்கள் என்று
நீயின்றி யாருமில்லை
ஆ: மஞ்சள் பூசும்
மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
பெ: கொஞ்சிப்பேசி
கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி
ஆ: வாசப்பூவின் தேனே...
வண்ண நிலாவே மானே..
பெ: காவல் ஏது
கட்டுக்கள் ஏது
காட்டாறு பாயும்போது
மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்
வஞ்சிப்பூங்கொடி
ஆ: கொஞ்சிப்பேசி
கொஞ்சிப்பேசி
கொஞ்சும் பைங்கிளி