menu-iconlogo
huatong
huatong
avatar

Radhai Manathil

Jyothikahuatong
sergio.spithuatong
Letras
Grabaciones
ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு ..பிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு ..பிடிக்க

கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்

கோதை ராதை நடந்தாள்

மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்

மூச்சு வாங்கி உறைந்தாள்

பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்

பாவை மறந்து தொலைந்தாள்

நெஞ்சை மூடிக் கொள்ள ஆடை தேவை என்று

நிலவின் ஒளியை எடுத்தாள்

நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்

நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்

கண்ணன் தேடி வந்த மகள்

தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்

தான் இருக்கின்ற இடத்தினில்

நிழலையும் தொடவில்லை

எங்கே எங்கே சொல் சொல்

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டுபிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு ..பிடிக்க

கண்ணன் ஊதும் குழல்

காற்றில் தூங்கி விட்டு

காந்தம் போல இழுக்கும்

மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது

மாய கண்ணன் வழக்கம்

காடு இருண்டுவிட கண்கள் சிவந்து விட

காதல் ராதை அலைந்தாள்

அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு

ஆசை நோயில் விழுந்தாள்

உதடு துடிக்கும் பேச்சு இல்லை

உயிரும் இருக்கும் மூச்சு இல்லை

வந்த பாதை நினைவு இல்லை

போகும் பாதை புரியவில்லை

உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்

பேதை ராதை ஜீவன் கொள்வாள்

கண்ணா எங்கே வா வா

கண்ணீரில் உயிர் துடிக்க

கண்ணா வா உயிர் கொடுக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ

கண் ரெண்டும் தந்தியடிக்க

கண்ணா வா கண்டு ..பிடிக்க

கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று அந்த

கன்னி கண்கள் விழித்தாள்

கன்னம் தீடியது கண்ணனல்ல

வெறும் காற்று என்று திகைத்தாள்

கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை சொல்லி

கைகள் நீட்டி அழைத்தாள்

காட்டில் தொலைத்துவிட்ட

கண்ணின் நீர் துளியை

எங்கு கண்டு பிடிப்பாள்

கிளியின் சிறகை வாங்கிக்கொண்டு

கிழக்கை நோக்கி சிறகடித்தாள்

குயிலின் குரலை வாங்கிக்கொண்டு

கூவி கூவி அவள் அழைத்தாள்

அவள் குறை உயிர் கரையும்முன்

உடல் மண்ணில் சரியும்முன்

கண்ணா கண்ணா நீ வா

கண்ணீரில் உயிர் துடிக்க

கண்ணா வா உயிர் கொடுக்க

நன்றி

Más De Jyothika

Ver todologo