‘திரை இசை திலகம்’ திரு மஹாதேவன்
அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
இந்த காவிய பாடலை
பாடி நம்மை மகிழ்வித்த
திரு.பி.பி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கும்
திருமதி.எஸ். ஜானகி அவர்களுக்கும் நன்றி
பெண்: பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்...
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்…
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்...
பதி மதுரை வீதியிலே
வளம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே
வளம் வரும் தென்றல்
இந்த பாண்டியனார் பைங்கிளியை
தீண்டிடும் தென்றல்..
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
பெண்: கார் குழலை நீராட்டி
கண் இரண்டை தாலாட்டி
இசை
கார் குழலை நீராட்டி
கண் இரண்டை தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு
சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்து
தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
பெண்: கட்டிலிலே...சேர்ந்திருக்கும்...
காதலர்கள்.. மேனியிலே..
கட்டிலிலே சேர்ந்திருக்கும்
காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி
மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி
சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி
சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆண்: வான் பறக்கும் ... கொடியினிலே
மீன் பறக்கும்.. மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே
மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்யும்
தளிர் மணி தென்றல்..
பெண்: அது வான் பிறந்த போது
வந்த வாலிப தென்றல்
வான் பிறந்த போது
வந்த வாலிப தென்றல்
ஆண்: பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
பெண்: ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆண்: கன்னியர்கள் மேனியிலே
கலந்து வரும் வேளையிலும்
இசை
கன்னியர்கள் மேனியிலே
கலந்து வரும் வேளையிலும்
தன்னுடலை காட்டாத தந்திர தென்றல்
பெண்: ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத
சாகச தென்றல்
தென்னவர்க்கும் அஞ்சாத
சாகச தென்றல்
இருவரும்: பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும்
தவழ்ந்திடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே
புறப்படும் தென்றல்