பாடகி : பானுமதி
இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம்
பெண் : பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
பெண் : பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
பெண் : காய்க்காத மரத்தடியில்
தேனாறு பாயுதடா….
கனிந்துவிட்ட சின்ன மரம்
கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா
பெண் : பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று
பெண் : பெற்றெடுக்க மனம் இருந்தும்
பிள்ளைக் கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு
மற்ற சுகம் இல்லை
பெண் : பெற்றெடுக்க மனம் இருந்தும்
பிள்ளைக் கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு
மற்ற சுகம் இல்லை
பெண் : சுற்றமென்னும் பறவையெல்லாம்
குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும்
பேறு மட்டும் இல்லை
பேறு மட்டும் இல்லை
பெண் : பூவாகி காயாகி
கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல்
கிடந்த மரம் ஒன்று
கிடந்த மரம் ஒன்று