menu-iconlogo
logo

Ennavo Ennavo

logo
Letras
இசையமைப்பாளர் திரு.S.A. ராஜ்குமார்

அவர்களுக்கு நன்றி

இந்த இனிய பாடலை பாடிய

திருமதி.மகாலட்சுமி அவர்களுக்கும்

திரு.ஹரிஹரன் அவர்களுக்கும் நன்றி

பெண்: என்னவோ என்னவோ

என்வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ

என்னிடம் வார்த்தையில்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

பெண்: உன் ஆயுள் வரை தான்

வாழ்ந்திருப்பேன்

பெண்: உன் சுவாசத்திலே

நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான்

வாழ்ந்திருப்பேன்

என்னோடு நீயாக

உன்னோடு நானாகவா...

ப்ரியமானவனே..ஹே ஹே ஹஹெய்

என்னவோ என்னவோ

என்வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ

என்னிடம் வார்த்தையில்லை

ஆண்: மழை தேடி நான் நனைவேன்

சம்மதமா சம்மதமா

பெண்: குடையாக நான் வருவேன்

சம்மதமா சம்மதமா

ஆண்: விரல் பிடித்து நகம் கடிப்பேன்

சம்மதமா சம்மதமா

பெண்: நீ கடிக்க நகம் வளர்ப்பேன்

சம்மதமா சம்மதமா

ஆண்: விடிகாலை வேளை வரை

என்வசம் நீ சம்மதமா

பெண்: இடைவேளை வேண்டுமென்று

இடை கேக்கும் சம்மதமா

ஆண்: நீ பாதி நான் பாதி

என்றிருக்க சம்மதமா

பெண்: என்னுயிரில் சரிபாதி

நான் தருவேன் சம்மதமா

ஆண்: என்னவோ என்னவோ

என்வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ

என்னிடம் வார்த்தையில்லை

ஆண்: இமையாக நானிருப்பேன்

சம்மதமா சம்மதமா

பெண்: இமைக்காமல் பார்த்திருப்பேன்

சம்மதமா சம்மதமா

ஆண்: கனவாக நான் வருவேன்

சம்மதமா சம்மதமா

பெண்: கண்மூடி தவமிருப்பேன்

சம்மதமா சம்மதமா

ஆண்: ஹோ... ஒருகோடி ராத்திரிகள்

மடி தூங்க சம்மதமா

பெண்: பலகோடி பௌர்ணமிகள்

பார்த்திடுவேன் சம்மதமா

ஆண்: பிரியாத வரம் ஒன்றை

தரவேண்டும் சம்மதமா

பெண்: பிரிந்தாலும் உன்னை சேரும்

உயிர் வேண்டும் சம்மதமா

ஆண்: என்னவோ என்னவோ

என்வசம் நானில்லை

என்ன நான் சொல்வதோ

என்னிடம் வார்த்தையில்லை

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்

ஆண்: உன் ஆயுள் வரை தான்

வாழ்ந்திருப்பேன்

ஆண்: உன் சுவாசத்திலே

நான் சேர்ந்திருப்பேன்

உன் ஆயுள் வரை தான்

வாழ்ந்திருப்பேன்

பெண்: என்னோடு நீயாக

உன்னோடு நானாகவா

ஆண்: ப்ரியமானவளே... ஹே ஹே ஹஹெய்

பெண்: ப்ரியமானவனே.. ஹே ஹே ஹஹெய்

ஆண்: ப்ரியமானவளே.. ஹே ஹே ஹஹெய்

பெண்: ப்ரியமானவனே.. ஹே ஹே ஹஹெய்