வணக்கம்
பாடல் தேன்மல்லி பூவே
படம்: தியாகம்
குரல்கள்: TMS ஜானகி
நடிப்பு சிவாஜி கணேசன் லட்சுமி
.தேன்மல்லி பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணே என் ராணி
நீ இன்றி நான் இல்லையே
.தேன்மல்லி பூவே
பூந்தென்றல் காற்றே
என் கண்ணா என் மன்னா
நீ இன்றி நான் இல்லையே
.தேன்மல்லி பூவே
பாடல் ஒருங்கமைப்பு
திரு.அன்புவிஷ்வா
தமிழ் வரிகள்
.முத்தாரம் மார்மீது தவழ்கின்றது
எனக்கதில் கொஞ்சம் இடமும் கொடு
.தேர் உண்டு நீ உண்டு திருநாள் உண்டு
திருமகள் நெஞ்சில்
துயில் கொள்ள வா
.உலகமெல்லாம் ஒரு நிலவு
.இதயமெல்லாம் ஒரு நினைவு
என் வாழ்வின் ஆனந்தம் நீயே
.தேன்மல்லி பூவே
பூந்தென்றல் காற்றே
..என் கண்ணா என் மன்னா
நீ இன்றி நான் இல்லையே
.தேன்மல்லி பூவே
.செவ்வாழை பொன்மேனி துடிக்கின்றது
சிறு தொட்டில் தந்து உறங்க விடு
.தித்திக்கும் செவ்வாயும் நனைகின்றது
திருமுத்தம் தந்து மயங்க விடு
.மலர்களிலே அணை விரிப்போம்
.மன்மதனை துணைகழைப்போம்
இரவேது பகலேது கண்ணே
.தேன்மல்லி பூவே
பூந்தென்றல் காற்றே
.என் கண்ணே என் ராணி
நீ இன்றி நான் இல்லையே….
.தேன்மல்லி பூவே ( .ஆ….ஆ…ஆ….)
பூந்தென்றல் காற்றே ( .ஆ…ஆ….ஆ…ஆ…..)
நன்றி இப்பாடலுடன்
இணைந்ததற்கும் இந்த ஒலிநாடாவை
உபயோகிப்பதற்கும் மீண்டும்
சந்திப்போம்