menu-iconlogo
logo

Oru Kanam Oru Yugam

logo
Paroles
ஓ …ஆ...ஓ ...ஓ ….

ஒரு கணம் ஒரு யுகமாக

ஏன் தோன்ற வேண்டுமோ..

தினம் தினம் உனை எதிர்பார்த்து

மனம் ஏங்க வேண்டுமோ..

ஒரு கணம் ஒரு யுகமாக

ஏன் தோன்ற வேண்டுமோ..

தினம் தினம் உனை எதிர்பார்த்து

மனம் ஏங்க வேண்டுமோ..

தென்றலும் உனை பாடுதே

வெண்மதி உனை தேடுதே

இது காதல் ராகமே

புரியாத மோகமே …

ஒரு கணம் ஒரு யுகமாக

ஏன் தோன்ற வேண்டுமோ..

வான் மீது விண்மீன்கள்

வேடிக்கை பார்க்கின்றதே

உன் தூது வாராமல்

நெஞ்சுக்குள் வேர்க்கின்றதே

நெஞ்சுக்குள் நீ போட்ட

மூக்குத்தி மின்னல்களே

வஞ்சிக்குள் உன் காதல்

எண்ணத்தின் பின்னல்களே..

ஓ ஓ …..

இது காதல் ராகமே

புரியாத மோகமே …

ஒரு கணம் ஒரு யுகமாக

ஏன் தோன்ற வேண்டுமோ..

வானமும் பூந்தென்றலும்

வாழ்த்துதே மலர் தூவுதே

இது காதல் ராகமே

புரியாத மோகமே …

மேகத்தில் ஈரம் போல்

கண்ணுக்குள் நீர் ஏனம்மா..

பூமிக்குள் வைரம் போல்

நெஞ்சத்தில் நீ தானம்மா..

சோகங்கள் சொல்லாமல்

ஓடட்டும் காதல் பெண்ணே

சொந்தங்கள் போகாமல்

கூடட்டும் ஊடல் பெண்ணே..

ஓ ஓ …..

இது காதல் ராகமே

புரியாத மோகமே …

ஒரு கணம் ஒரு யுகமாக

ஏன் தோன்ற வேண்டுமோ..

தினம் தினம் உனை எதிர்பார்த்து

மனம் ஏங்க வேண்டுமோ..

வானமும் பூந்தென்றலும்

வாழ்த்துதே மலர் தூவுதே

இது காதல் ராகமே

புரியாத மோகமே …

ஒரு கணம் ஒரு யுகமாக

ஏன் தோன்ற வேண்டுமோ..