பெ: சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும்
நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
ஆ: சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
பாடலையும் அதன் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக கொண்டு வருவது
பெ: விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்
ஆ: தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
பெ: வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்
ஆ: சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
பெ: இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
பாடலையும் அதன் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக கொண்டு வருவது
ஆ: நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்
பெ: விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
ஆ: உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்
பெ: சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
ஆ: இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
பெ: நிதமும் தொடரும் கனவும்
நினைவும் இது மாறாது
ஆ: ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்
பெ: சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
ஆ: இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்