menu-iconlogo
logo

Engengu Nee Sendra Pothum

logo
Paroles
இசை

பதிவேற்றம்:

பெண்: எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

இசை

பதிவேற்றம்:

ஆண்: கண்களின் பார்வை

அம்புகள் போலே

நெஞ்சினிலே பாய்வதுமேன்

அம்புகள் மீண்டும்

பாய்ந்திடும் போது

காயங்களும் ஆறியதேன்

பெண்: ஆறிடும் நெஞ்சம்

தேறிடும் நேரம்

பிரிந்தது ஏனோ உன் உறவு

நெருங்கிடும் போதும்

நீங்கிடும் போதும்

மயங்குவதேனோ என் மனது

ஆண்: இரு நெஞ்சின் துன்பம்

இது காதல் தான்

அது போல இன்பம்

எது கண்மணி

பூங்காற்று தாலாட்டும்

அன்பே அன்பே..

பெண்: எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

இசை

பதிவேற்றம்:

பெண்: மாலை நந் நேரம்

மாறிட வேண்டாம்

மாங்குயிலே மாங்குயிலே

காலங்கள் கூட மாறிட வேண்டாம்

கண்மணியே கண்மணியே

ஆண்: சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்

சந்திரன் அங்கே நின்றிடட்டும்

மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்

கடலினில் கூட அலை நிற்கட்டும்

பெண்: உன்னோடு சேரும் ஒரு நேரமே

என்றென்றும் இங்கே நிலையாகட்டும்

பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆண்: ஆனந்த கீதம் ஆரம்பமாகும்

காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பெண்: பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

ஆண்: எங்கெங்கு நீ சென்ற போதும்

என் நெஞ்சமே உன்னை தேடும்

இருவரும்: லாலால லாலால லா லா

லாலால லாலால லா லா

நன்றி

பதிவேற்றம்: