பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடி பார்த்தேன் எங்கும் இன்பம்
அன்பென்னும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் என்னும்
இன்றைக்கும் என்றைக்கும்
நீ எந்தன் பக்கத்தில்
இன்பத்தை வர்ணிக்கும்
என்னுள்ளம் சொர்க்கத்தில்
மெல்லிய நூலிடை வாடியதே
மன்மத காவியம் மூடியதே
அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பென்னும் கீர்த்தனை பாடியதே
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு
என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில்
பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும்
பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு
என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு....