M : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து… மழைக் காத்து
F : காத்து… மழைக் காத்து
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து… மழைக் காத்து
ஒயிலாக மயிலாடும்
அலை போல மனமாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து… மழைக் காத்து
M : தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
F : தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
M : ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னென்னமோ ஆகிப் போச்சு
F : சேராமல் தீராது
வாடக் குளிரில் வாடுது மனசு
M : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து… மழைக் காத்து
F : பூவுக்குள்ள
M : வாசம் வச்சான்
F : பாலுக்குள்ள
M : நெய்யை வச்சான்
F : பூவுக்குள்ள
M : வாசம் வச்சான்
F : பாலுக்குள்ள
M : நெய்யை வச்சான்
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
F : கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் மனசு
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
M : நீராடி நீ.... வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு
F : மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
காத்து… மழைக் காத்து
M : ஒயிலாக மயிலாடும்
அலை போல மனம் பாடும்
மேகம் கருக்குது மழை வர பார்க்குது
வீசி அடிக்குது காத்து
F : காத்து…. மழைக் காத்து
M : காத்து…. மழைக் காத்து