menu-iconlogo
logo

Vetti Veru Vasam

logo
Paroles
பாடல்: வெட்டி வேரு வாசம்

திரைப்படம்: முதல் மரியாதை

பாடியவர்கள்: மலேசியா

வாசுதேவன் எஸ்.ஜானகி

இசை: இளையராஜா

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

( இசை)

(பல்லவி)

பெ: வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்

வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்

பூவுக்கு வாசம் உண்டு

பூமிக்கும் வாசம் உண்டு

ஆ: வேருக்கு வாசம் வந்ததுண்டோ… மா..னே

பெ: வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

( இசை)

(சரணம்)

ஆ: பச்சக் கிளியோ… ஒட்டுக்கிருச்சு..

இச்சக் கிளியோ… ஒத்துக்கிருச்சு

பெ: வச்ச நெருப்பு… தொட்டுக்கிருச்சு…

பச்ச மனசு… பத்திக்கிருச்சு

ஆ: கையைக் கட்டி நிக்கச் சொன்னா

காட்டு வெள்ளம் நிக்காது

பெ: காதல் மட்டும் கூடாதுன்னா

பூமி இங்கு சுத்தாது

ஆ: சாமி கிட்ட கே..ளு

யாரு போட்ட கோ..டு

பெ: பஞ்சுக்குள்ள தீய வெச்சு

பொத்தி வச்சவுக யாரு

ஆ: வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்..

வெட்டி வேரு வா..சம்

வெடலப் புள்ள நேசம்..

பெ: பூவுக்கு வாசம் உண்டு

பூமிக்கும் வாசம் உண்டு

ஆ: வேருக்கு வாசம் வந்ததுண்டோ… மா..னே

பெ: வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்..

ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:

( இசை)

(சரணம் )

பெ: ஒன்னக் கண்டு நா...ன்

சொக்கி நிக்கிறே…ன்

கண்ணுக்குள்ள நா..ன்

கண்ணி வெக்கிறேன்

ஆ: சொல்லாமத் தா...ன்

தத்தளிக்கிறே…ன்

தாளாமத் தா…ன்

தள்ளி நிக்கிறேன்

பெ: பாசம் உள்ள தர்மம்

இதைப் பாவமின்னு சொல்லாது

ஆ: குருவி கட்டும் கூட்டுக்குள்ள

குண்டு வைக்கக் கூடாது

பெ: புத்தி கேட்ட தேசம்

பொடி வெச்சுப் பேசும்

ஆ: சாதி மத பேதம் எல்லாம்

முன்னவங்க செஞ்ச மோ..சம்

பெ: வெட்டி வேரு வாசம்

வெடலப் புள்ள நேசம்

வெட்டி வேரு வா..சம்

வெடலப் புள்ள நேசம்

பூவுக்கு வாசம் உண்டு

பூமிக்கும் வாசம் உண்டு

ஆ: வேருக்கு வாசம் வந்ததுண்டோ… மா..னே

பெ: வெட்டி வேரு வாசம்

ஆ: வெடலப் புள்ள நேசம்

இனிய இப்பாடலை வடிவில் விலை கொடுத்து

தயாரித்து வழங்குவது

Vetti Veru Vasam par Malaysia Vasudevan/S. Janaki - Paroles et Couvertures