menu-iconlogo
logo

Oru Sudar Iru Sudar

logo
Paroles
ஒருசுடர் இருசுடர்

ஒளிச்சுடர் மணிச்சுடர்

முத்துச்சுடராடுதடி..

திருவருள் வழங்கிட

தெருவெங்கும் விளங்கிட

வண்ணச்சுடர் ஆடுதடி

நான் ஓர் வரம்

உன்னிடம்.. வாங்க வேண்டும்

மங்களக் குங்குமம் மஞ்சள் பூசியே

பண்டிகை நாளென ஒன்றாய் கூடியே

நூறாண்டுகள் உன்னுடன் வாழ வேண்டும்

ஜோதியை வீதியில் எங்கும் ஏந்திய

ஆதியை அன்னையை நெஞ்சில் போற்றிட

நான் கேட்கும் யாவும்

நம் கையில் சேரும்

நான் பார்க்கும் யாவும்

பூஞ்சோலை ஆகும்

வானம் பாடிகள் கானம் பாடிடும்

பொன் வசந்தம் விளங்கும் வருஷம் முழுதும்

ஒருசுடர் இருசுடர்

ஒளிச்சுடர் மணிச்சுடர்

முத்துச்சுடராடுதடி

திருவருள் வழங்கிட

தெருவெங்கும் விளங்கிட

வண்ணச்சுடர் ஆடுதடி

கார்த்திகை தீபம்

கண்ணுக்கழகாகும்

அன்னக்கிளியே ஏற்று..

காலங்கள் தோறும்

கன்னியர்கள் வேண்டும்

அம்மனடியே போற்று!

ஓராயிரம் ஆசைகள் ஊஞ்சலாடும்

நெஞ்சிலே நெஞ்சிலே நேசம் பூத்தது

கொஞ்சலாய் கொஞ்சவே நேரம் வாய்த்தது

ஓர் நாயகன் ஞாபகம் நீங்கிடாமல்

தோகையின் தோகையின் தேகம் வாடுது

தென்றலும் தென்றலும் ராகம் பாடுது

பொன்மாலை தோறும் பூந்தீபம் ஏற்றும்

ஶ்ரீங்காரம் கூடும் நல்யோகம் வேண்டும்

தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்

என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்

ஒருசுடர் இருசுடர்

ஒளிச்சுடர் மணிச்சுடர்

முத்துச்சுடராடுதடி..

திருவருள் வழங்கிட

தெருவெங்கும் விளங்கிட

வண்ணச்சுடர் ஆடுதடி..

கார்த்திகை தீபம்

கண்ணுக்கழகாகும்

அன்னக்கிளியே ஏற்று..

காலங்கள் தோறும்

கன்னியர்கள் வேண்டும்

அம்மனடியே போற்று..