menu-iconlogo
logo

Thooliyile Aada Vantha

logo
Paroles
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

பாட்டெடுத்து நான் படிச்சா

காட்டருவி கண்ணுறங்கும்

பட்டமரம் பூ மலரும்

பாறையிலும் நீர் சுரக்கும்

பாட்டெடுத்து நான் படிச்சா

காட்டருவி கண்ணுறங்கும்

பட்டமரம் பூ மலரும்

பாறையிலும் நீர் சுரக்கும்

ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்

ஏழு கட்ட எட்டுக் கட்ட

தெரிஞ்சா நான் படிச்சேன்

நான் படைச்ச ஞானமெல்லாம்

யார் கொடுத்தா சாமி தான்

ஏடெடுத்துப் படிச்சதில்ல

சாட்சியிந்த பூமி தான்

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட

சோறுபோடத் தாயிருக்கா

பட்டினியப் பார்த்ததில்ல

தாயிருக்கும் காரணத்தால்

கோயிலுக்குப் போனதில்ல

சோறுபோடத் தாயிருக்கா

பட்டினியப் பார்த்ததில்ல

தாயிருக்கும் காரணத்தால்

கோயிலுக்குப் போனதில்ல

தாயடிச்சு வலிச்சதில்ல

இருந்தும் நானழுவேன்

நானழுக தாங்கிடுமா ஒடனே தாயழுவா

ஆக மொத்தம் தாய் மனசு

போல் நடக்கும் பிள்ள தான்

வாழுகிற வாழ்க்கையிலே

தோல்விகளே இல்லை தான்

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே

ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே

தொட்டில் மேலே முத்து மால

வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட

வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட

Thooliyile Aada Vantha par Mano - Paroles et Couvertures