ஆ: கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததேன் கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே ஹோ..
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
பதிவேற்றம்: அருண்...
பெ: நானே உன் சுமையாக ஏன் வந்தேன்
சிறகெல்லாம் சிறையாக வாழ்கின்றேன்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
நான் உறங்கும் நாள் வேண்டும்
சாய்ந்து கொள்ளத் தோள் வேண்டும்
என் கண்ணில் நீர் வேண்டும்
சுகமாக அழ வேண்டும்
ஆ: கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
பதிவேற்றம்: அருண்...
பெ: இருள் மூடும் கடலோடு நான் இங்கே
என் தோணி கரை சேரும் நாள் எங்கே
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
பூவுக்குள் பூகம்பம் எங்கு வரும் ஆனந்தம்
நிழலாக நீ வந்தால் இது போதும் பேரின்பம்
ஆ: கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
மனமே நினைவை மறந்து விடு
துணை நான் அழகே துயரம் விடு
விழியில் விழும் துளி என் மார்பில்
வீழ்ந்ததே கண்ணே
அமுதம் சிந்தும் கண்ணில் கண்ணீரா
நியாயமா பெண்ணே ஹோ..
கண்ணில் என்ன கார்காலம்
கன்னங்களில் நீர்க்கோலம்
நன்றி.. அருண்...