கள்ளழகர் வைகையிலே
கால் பதிக்கும் வேளையிலே
பால் நிலவில் படுத்திகிட்டு
பருவராஹம் பாடணுமே
தன னனா………
சொக்கனுக்குப் பக்கத்திலே
சோடி என்று வந்தவளே
நூல் பொடவையில் ஒளிஞ்சுகிட்டு
நெனச்ச தாளம் போடணுமே
தன னனா………
ஆனாலும் உனக்கு ரொம்ப
அவசரம்தான் மாமாவே
ஒண்ணாக கூடும்போது
ஊர் முழுக்கப் பாக்காதா
அஹ் பாத்தாலும் தவறு இல்ல
பனி உறங்கும் ரோசாவே
முன்னால சோத்த வச்சா
மூக்குலதான் வேக்காதா
என்ன வாட்ட எண்ணுறியே
கை கோத்து பின்னுறியே
உன் பாட்டப் பாடி பலவிதமா
சேட்ட பண்ணுறியே
செங்குருவி செங்குருவி
காரமட செங்குருவி
சேலகட்டி மாமனுக்கு
மாலையிட்ட செங்குருவி
ஒத்திகைக்குப் போவமா
ஒத்துமையா ஆவமா
வெக்கமெல்லாம் மூட்டகட்டி
வச்சா என்ன ஓரமா