Movie : Alai (2018)
Lyrics : Karthik, Srivardhini
Music : Vidyasagar
Search for 'Parimala HQ'
Pallavi
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அழும்புகள் செய்பவனா
மழை போலே வருவானா…..
மடி மேலே விழுவானா….
மலர் போலே தொடுவானா… தொடுவானா..
இவன் தானா….
இவன் தானா…
இவனோடு…. இணைவேனா…
இவன் தானா….
இவன் தானா…
இவனோடு…. இணைவேனா…
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அழும்புகள் செய்பவனா
Charanam 1
ஒருமுறை பார்க்கையில் பனியென உருகினேன்
மறுமுறை பார்க்கையில் தீயிலே வேகிறேன்
கண்களா…ல் நெஞ்சிலே….காயங்கள் செய்கிறாய்
மோகத்தின் பஞ்சினால் ஒத்தடம் வைக்கிறாய்
இமைக்கும் பொழுதில் இதயம் தொலைத்தேன்
எனக்குள் விழுந்தே…ன் உனக்குள் எழுந்தேன்
காதல் நீரிலே.. மூழ்கி போகிறே…ன்
கையை நீட்டவா…. கரையில் சேர்க்கவா
இவன் தானா
இவன் தானா
இவனோடு… இணைவேனா…. ஆ.. ஆ.. ஆ
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவளா
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா
செய்பவனா
செய்பவனா
Charanam 2
தூரத்தில் நின்றெனை ரசிப்பது போதுமா
தூரத்து வெண்ணிலா தாகங்கள் தீர்க்குமா
வெட்கத்தை வீசியே வாயென சொல்கிறாய்
பக்கத்தில் வந்ததும் பத்தியம் என்கிறாய்
அணைப்பா..ய் என நான் தவியா…ய் தவித்தேன்
இருந்தும் வெளியே பொய்யா..ய் முறைத்தேன்
கன்னக்குழிகள் தா…ன் காதல் தேசமா
ஈரமுத்தம் தா…ன் இன்ப தீர்த்தமா...
இவள் தானா
இவள் தானா
இவளோடு… இணைவேனா.. ஆ.. ஆ.. ஆ
என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்
ரகளைகள் செய்பவனா
என் அழகிய நினைவினில் அடிக்கடி நுழைந்தொரு
அழும்புகள் செய்பவளா
மழை போலே வருவாளா மடி மேலே விழுவாளா..
மலர் போலே தொடுவானா தொடுவானா
இவன் தானா…
இவள் தானா…
இவனோடு…. இணைவேனா…
இவன் தானா…
இவள் தானா…
இவனோடு…. இணைவேனா…
Search 'Parimala HQ for
More HQ songs
on 09 07 20