ஆண் : ஆலமரக்கிளி அன்னாடம் என்னோடு
பேசுமா இல்லை ஏசுமா
ஆத்தங்கரையினில் அத்தானும் முத்தாடக்
கூடுமா விட்டு ஓடுமா
பெண் : கோலக்கிளிப் பேச்ச கட்டாயம் தட்டாம
கேட்கவா என்னைப் பார்க்கவா
காலம் கடத்தாமல் கையோடு கையாக
சேர்க்கவா மையல் தீர்க்கவா
ஆண் : போதும் இது போதும் இந்த பிறவியில்
வேறொன்றும் வேண்டாமே
பெண் : மோதும் அலை மோதும் நெஞ்சக் கடலில்
ஆசைகள் ஓயாம
ஆண் : வந்து ஒட்டிக்கோ
ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ
பெண் : அடியாத்தி வாத்தியாரு பாடம் சொல்ல
மறந்ததென்ன
ஆண் : சிவகாமி நெனப்பினிலே பாடம் சொல்ல
மறந்து விட்டேன்
பெண் : எம்மனச ஒட்டுறியே
மம்முட்டிப் போல் வெட்டுறியே
ஆண் : வந்து ஒட்டிக்கோ
ஒட்டிக்கோ ஒட்டிக்கோ
என்னை கட்டிக்கோ கட்டிக்கோ கட்டிக்கோ