பார்த்ததும் இரண்டு விழியும்
இமைக்க மறந்து போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட
குயிலும் மறந்து போச்சு
தொட்டதும் செவப்பு சேலை
இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேசவந்தது
பாதி மறந்துப் போச்சு
சுந்தரி உன்னையும் என்னையும்
பிரிச்ச காலம் போச்சு
என் ராமனே உன்னை கண்டதும்
பழக்கம் வழக்கலாச்சு?
உறவு தடுத்த போதும்
உயிர் கலந்தாச்சு
உனக்கு சேர்த்து தானே
நான் விடும் மூச்சு
வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும்
பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான்
உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும்
பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கமில்லையே