menu-iconlogo
logo

Iniyavale Endru Padi

logo
Paroles
ஆண்: ஓ... ஓ... ஏ... ஆ...

பெண்: ஆஹா ஆ... ஹா...

எஹேஹேஹே அஹஹாஹா

( இசை )

பெண்: ஓஹோ... ஓஹொஹோ ஹோ

ஆண்: ஏஹே ஏஹே ஏஹே ஏஹே

இனியவளே என்று பாடி வந்தேன்

பெண்: ம்... ம்...ஓஹொஹோ ஹோ

ஆண்: இனியவளே என்று பாடி வந்தேன்

இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்

இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண்: ஆஹா.. ஹா ஹா ஹா...

( இசை )

இனியவனே என்று பாடி வந்தேன்

இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன் ஆ...

ஏழிசையில் மோகனமாம் இனிமை தந்தவன்

Movie: Sivagamiyin Selvan

Actors: Sivaji Ganesan, Vanisree

Singers: T.M.Soundararajan, P.Suseela

Music: M.S.Viswanathan

ஆண்: ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக

பெண்: ஒன்றானவர் வாழ்வே

இன்ப வெள்ளம் என்றாக

ஆண்: துணை தேடி வரும் போது

கண்ணில் என்ன நாணமோ

பெண்: குணம் நான்கில் உருவான

பெண்மை,ன்னு தோணுமோ

ஆண்: திரு நாள் வரும் அதோ பார்

பெண்: தருவார் சுகம் இதோ பார்

ஆண்: திரு நாள் வரும் அதோ பார்

பெண்: தருவார் சுகம் இதோ பார்

ஆண்: பொன் மாலையில்

பெண்: பூ மாலையாய்

ஆண்: நெஞ்சில் சூடவோ

பெண்: சூடவோ

ஆண்: சூடவோ

பெண்: இனியவனே என்று பாடி வந்தேன்

இனி அவன் தான் என்று ஆகி விட்டேன்

ஆண்: தாலாட்டிடும் நெஞ்சம் தன்னை

தங்கம் என்றாளோ

பெண்: பாராட்டிடும் இன்பம் தன்னை

மங்கை கொண்டாளோ

ஆண்: நினைத்தாலும் சுகம் தானே

இந்த நெஞ்சின் காவியம்

பெண்: கொடுத்தாலும் நலம் தானே

என்னை கொஞ்சும் ஓவியம்

ஆண்: இதழால் உடல் அளந்தான்

பெண்: இவளோ தன்னை மறந்தாள்

ஆண்: இதழால் உடல் அளந்தான்

பெண்: இவளோ தன்னை மறந்தாள்

ஆண்: ஏன் என்பதை

பெண்: யார் சொல்வது

ஆண்: எங்கும் மௌனமே

பெண்: மௌனமே

ஆண்: மௌனமே

இனியவளே என்று பாடி வந்தேன்

இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்

இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்

பெண்: ஆ... லாலலலா ஓஹொஹொஹோ

ஒஹொஹோ ம்ஹ்ம்..ஹ்ம்ம்..ஹ்ம்ம்