menu-iconlogo
logo

Oru Raja Raniyidam

logo
Paroles
பெண்:லால லலலல லாலா...

லாலலா... லாலலா... லாலலா... லா...

ஆண்: ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்

ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்

பெண்: அவன் வேண்டும் வேண்டும் என்றான்

அவள் நாளை நாளை என்றாள்

அவன் வேண்டும் வேண்டும் என்றான்

அவள் நாளை நாளை என்றாள்

ஆண்: இதை காணாது நீயின்றி தீராதென்றான்

பெண்: ஒரு ராஜா ராணியிடம்

ஆண்: வெகு நாளாக ஆசை கொண்டான்

ஆண்: செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும்

சித்திரத்து தேன் குடமோ

செந்நிறத்துப் பூச்சரமோ மையெழுதும்

சித்திரத்து தேன் குடமோ

பெண்: மன்னர் என்ன மாநிறமோ பேசும்

மந்திரங்கள் யாரிடமோ

மன்னர் என்ன மாநிறமோ பேசும்

மந்திரங்கள் யாரிடமோ

ஆண்: ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம்

அச்சமுள்ள மான் இனமோ

பெண்: நாடு விட்டு நாடு வந்தால் பெண்மை

நாணம் இன்றி போய் விடுமோ

ஆண்: ஒரு ராஜா ராணியிடம்

வெகு நாளாக ஆசை கொண்டான்

ஆண்: ஓடம் பொன்னோடம்

இது உன்னோடும் என்னோடும் ஓடும்

பெண்: ஓடட்டும் ஓடமென்ன

இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்

ஆண்: ஓடம் பொன்னோடம்

இது உன்னோடும் என்னோடும் ஓடும்

பெண்: ஓடட்டும் ஓடமென்ன

இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்

ஆண்: விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

பெண்:இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா

ஆண்: விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா

பெண்:இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா

ஆண்: நாளை என் வானத்தில் தேவி நீ

பெண்: மாதத்தில் ஓர் நாள் தான் பௌர்ணமி

ஆண்: போகட்டும் போகப் போக

இந்தப் பொன்னூஞ்சல் என் நெஞ்சில் ஆடும்

பெண்: ஒரு ராஜா ராணியிடம்

ஆண்: வெகு நாளாக ஆசை கொண்டான்

பெண்: நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்

ஐ லவ் யூ

ஆண்: நானொரு தேனீ நீயொரு ரோஜா

ஐ லவ் யூ

பெண்: காலம் நம்மை தேடுகின்றது வா வா வா

ஆண்: காதல் தெய்வம் பாடுகின்றதே வாவாவா

ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்

அழகிய நைல் நதி ஓரத்தில்

மாலைப் பொழுதின் சாரத்தில்

மயங்கித் திரிவோம் பறவைகள் போல

பெண்: மஞ்சள் மலரால் ஆடை

பின்னுவோம் வா வா வா

ஆண்: வாழ்வே வா என ஆணை போடுவோம் வா வா வா

ஆண்: வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து

அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்

புது விதமன சடுகுடு விளையாட்டு

பெண்: விட்டு விடாமல் கட்டியணைத்து

தொட்டது பாதி பட்டது பாதி

வித விதமான ஜோடிகள் விளையாட்டு

இது காதலில் ஒரு ரகமோ

இங்கு காதலர் அறிமுகமோ

ஆண்: இது காதலில் ஒரு ரகமோ

இங்கு காதலர் அறிமுகமோ

ஆண்: இந்தப் பூ மெத்தை

பனியிட்ட பஞ்சு மெத்தையோ

பெண்: இந்த பூமிக்கு

அவனிட்ட பட்டுச் சட்டையோ

ஆண்: சித்திரம் போலொரு முத்திரை இட்டானோ

பெண்: சேர்ந்து களித்திட கட்டளை இட்டானோ

ஆண்: இன்பத் தேனிடை ஆடும் தேவதை போல

ஆடிட வைத்தானோ

பெண்: இந்த நேரத்தில் இது சுகமோ

ஆண்: இதழோரத்தில் பரவசமோ

பெண்: இந்த நேரத்தில் இது சுகமோ

ஆண்: இதழோரத்தில் பரவசமோ