ஓஹோ......
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழகாய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
அடுப்பெரிக்கும் பெண்களெல்லாம்
அழகழகாய் படிக்குதப்பா
அச்சடித்த காகிதத்த
அடுக்கடுக்காய் சுமக்குதப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
ஏட்டினிலே படிக்குதப்பா
எடுத்துச்சொன்னா புரியலேப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
நாட்டுக்குதான் ராணியப்பா
வீட்டுக்கு அவ மனைவியப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
பட்டணத்துக் காதலப்பா
பாதியிலே மறையுமப்பா
பட்டிக்காட்டு காதலுக்கு
கெட்டியான உருவமப்பா
பட்டணத்துக் காதலப்பா
பாதியிலே மறையுமப்பா
பட்டிக்காட்டு காதலுக்கு
கெட்டியான உருவமப்பா
காசுபணம் சேருதப்பா
காரு வண்டி பறக்குதப்பா
காசுபணம் சேருதப்பா
காரு வண்டி பறக்குதப்பா
சேத்த பணம் செலவழிஞ்சா
நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பா
சேத்த பணம் செலவழிஞ்சா
நாட்டுப்பக்கம் ஒதுங்குதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்
ஊரப்பா பெரியதப்பா
உள்ளம்தான் சிறியதப்பா
பாரப்பா பழனியப்பா
பட்டணமாம் பட்டணமாம்