பாடகர்கள் : ராஜேஷ் கிருஷ்ணன், எஸ்.எ. ராஜ்குமார்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
குழு : …………………………..
ஆண் : நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு நீ
பேசினாய் என்னுள்ளே
தென்றல் தொடும் உணர்வு
ஆண் : ஒரே முறை நீ
கண் பாரடி அதில் கண்டேன்
நான் தாயின் மடி காதல்
என்று சொன்னாலே
தியானம் அல்லவா
உன்னை எண்ணி நானும்
தியானம் செய்யவா
ஆண் : நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு
குழு : ………………………..
ஆண் : நீயம் நடந்தால்
என்னை கடந்தால் ஒரு
பூங்காவே என் மேலே
மோதும் சுகம்
ஆண் : கண்ணை அசைத்தாய்
என்னை இசைத்தாய் ஒரு
பனி பாறை என்னுள்ளே
தோன்றும் கனம்
ஆண் : உன்னை சுற்றிடும்
விண் கலம் ஆகின்றேன்
உந்தன் பார்வையில் நான்
வளமாகிறேன்
ஆண் : நீ ஒற்றை ரோஜா
தந்தால் அதில் உலக
பூவின் வாசம் நீ ஓர
கண்ணில் பார்த்தால்
சில லட்சம் மின்னல்
வீசும்
ஆண் : அன்பே அன்பே
நீ தரை வானவில்
உன்னை பாடும் நான்
தவ பூங்குயில்
ஆண் : நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு
குழு : ………………………..
ஆண் : உந்தன் விழிக்குள்
என்னை அடைத்தால் ஒரு
அழகான சிறைச்சாலை
இதுவல்லவா
ஆண் : உன்னை பிரிந்தால்
எந்தன் விழிக்குள் ஒரு
முன்னூறு முள் வந்து
நடமாடுதே
ஆண் : கொன்று விட்டதே
என் ஒரு பார்வையே அன்பு
செய்திடு என் அதிகாரியே
ஆண் : நீ பூமி பந்தில்
வந்து நடமாடும் குட்டி
சொர்க்கம் நீ கல்லில்
அல்ல பெண்ணே
கனியாலே செய்த
சிற்பம்
ஆண் : உந்தன் கண்கள்
அது ஒரு அங்குலம்
ஆனால் அதில் என்
உயிர் சங்கமம்
ஆண் : நீ பார்க்கின்றாய்
என்னுள்ளே மின்னல்
தொடும் உணர்வு நீ
பேசினாய் என்னுள்ளே
தென்றல் தொடும்
உணர்வு
ஆண் : ஒரே முறை நீ
கண் பாரடி அதில் கண்டேன்
நான் தாயின் மடி காதல்
என்று சொன்னாலே தியானம்
அல்லவா உன்னை எண்ணி
நானும் தியானம் செய்யவா
குழு : …………………………….