புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
பொத்தி வைத்து மறைத்தேன்
என் பாஷை சொல்லவா
இதயம் திறந்து கேட்க்கிறேன்
என்னதான் தருவாய் பார்க்கிறேன்
நெஞ்சுக்குள்ளே என்னென்னமோ நினைத்தேன்
நித்தம் நித்தம் கற்பனைகள்
வளர்த்தேன் தவித்தேன்
புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா
செல்லக் கிளி என்னை குளிப்பிக்க வேண்டும்
சேலைத் தலைப்பில் துவட்டிட வேண்டும்
கல்லு சிலை போலே நி நிற்க வேண்டும்
கண்கள் பார்த்துத் தலைவார வேண்டும்
நீ வந்து இல்லை போட வேண்டும்
நான் வந்து பரிமாற வேண்டும்
என் இமை உன் விழி மூட வேண்டும்
இருவரும் ஒரு சுவரம் பாட வேண்டும்
உன்னில் என்னைத் தேட வேண்டும்
புத்தம் புது மலரே
என் ஆசை சொல்லவா