Prakash 31 High Digital
Male : சட்ட சட சட என மழை முளைக்கும்
சொட்டும் துளி அழகினில் கடல் முளைக்கும்
Female : திக்கு திகு திகு என தீ முளைக்கும்
தித்திடும்படி மலைத்தேன் முளைக்கும்
Male : சட்ட சட சட என மழை முளைக்கும்
சொட்டும் துளி அழகினில் கடல் முளைக்கும்
Female : திக்கு திகு திகுவென தீ முளைக்கும்
தித்திடும்படி மலைத்தேன் முளைக்கும்
Male : பசி முளைக்கும்
Female : பருகிடும் வரையினில்
Male : புது ருசி முளைக்கும்
Female : அட உயிர் வழி நெடுகினில்
Male : நெருப்பின் அனல் தெறிக்கும்படி முளைக்கும்
Both : காதல் காதல் காதல்
காதல் காதல் காதல்
Male : இந்த காதலை நான் அடைய
எத்தனை காமம் கடந்து வந்தேன்
Female : இந்த மௌனத்தை நான் உணர
எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்
Male : இரு இதழ் மழை நட
உடலது வெட வெட
நரம்புகள் சுடச்சுட தவிக்குதடி
Female : ஒரு முறை விழி தொட
உயிர் வரை பட பட
அனுபவம் அட டட புதியதடி
Male : அடை மழை நடுவிலே
உடையிலே முழுவதாய்
வெய்யில் சுட நனைகிறேன்
தேன் இதழாலே
Female : இரு வரி நேரிசலாய்
முதல் முறை உணர்கிறேன்
ஒரு வரி கவிதையாய்
ஆனதனாலே
Male : முகவரி கேட்டேன் நான் தானே
முத்தம் தந்தாய் நீ தானே
Female : ஊஞ்சல் கேட்டேன் நான் தானே
தோள்கள் தந்தாய் நீ தானே
Male : இந்த காதலை நான் அடைய
எத்தனை காமம் கடந்து வந்தேன்
Female : இந்த மௌனத்தை நான் உணர
எத்தனை வார்த்தைகள் கடந்து வந்தேன்..
Prakash 31
Female : இந்த கிளையினில் நான் அமர
எத்தனை தூரம் பறந்து வந்தேன்
Male : இந்த உயிரினை நான் அடைய
எத்தனை உடல்களை கடந்து வந்தேன்
Female : ஒரு விரல் வருடிட
ஒரு விரல் இறுகிட
இரு நிழல் திருகிட தகதிமிதா
Male : சிறு சிறு உரசலில்
உயிர் அணு நெரிசலில்
கலவரம் எழுகையில் உதவிடவா
Male : அருகிலே அணு உலை
Female : உயிரிலே புயல் அலை
Male : உயருதே கொதி நிலை
தேவதையாலே
Female : இதழிலே வெயில் மழை
Male : உரியுதே உயிர் கிளை
Female : இடையிலே புதுச் சுமை
மோகத்தினாலே
Male : வண்ணம் கேட்டேன் நான் தானே
வானவில் தந்தாய் நீ தானே
Female : என்னை கேட்டாய் நீ தானே
உன்னை தந்தேன் நான் தானே
Male : சட்ட சட சட என மழை முளைக்கும்
சொட்டும் துளி அழகினில் கடல் முளைக்கும்
Female : திக்கு திகு திகுவென தீ முளைக்கும்
தித்திடும்படி மலைத்தேன் முளைக்கும்
Male : பசி முளைக்கும்
Female : பருகிடும் வரையினில்
Male : புது ருசி முளைக்கும்
Female : அட உயிர் வழி நெடுகினில்
Male : நெருப்பின் அனல் தெறிக்கும்படி முளைக்கும்
Both : காதல் காதல் காதல்
காதல் காதல் காதல்..
Presented by Prakash 31