menu-iconlogo
logo

Chinna Chinna Kannukkulle HDQ from Kamarasu - Prakash 31

logo
เนื้อเพลง

Prakash 31 High Digital

பெண் : சின்ன சின்ன கண்ணுக்குள்ளே

என்னை அள்ளி வைக்கட்டுமா

மெல்ல மெல்ல நெஞ்சுக்குள்ளே

என் மனதை தைக்கட்டுமா

ஆண் : அந்த மேக கூட்டத்தை போர்வையாக்கி

உன் மேனி போற்றி விடவா

பெண் : அந்த மூன்று கடல்களும் மோதும் மலைக்கு

உன் பெயரை வைத்து விடவா

ஆண் : உனது அழகை கண்டு

அலைகள் துள்ளி வந்து

உறவாட என்னை கெஞ்சுதே

பெண் : எனது உயிரில் வந்து

இணைந்த உன்னைக் கண்டு

இளம் காற்று முத்தம் கொஞ்சுதே

பெண் : சின்னச்சின்ன கண்ணுக்குள்ளே

ஆண் : கண்ணுக்குள்ளே

பெண் : என்னை அள்ளி வைக்கட்டுமா..

குழு : ...Prakash 31

பெண் : இது பூ விரியும் நல்ல பொழுது

நெஞ்சில் காவிரிகள் பொங்கும் வயது

ஆண் : அந்த வானம் விட்டு வந்த நிலவு

எந்த வாழ்வில் இன்று தங்க கனவு

பெண் : மலை என உதவும் குணம் உள்ள உனக்கு

குடை என நான் வருவேன்

ஆண் : நதியென குளிரும் மனம் உள்ள உனக்கு

நிழல் ஒன்று நான் தருவேன்

பெண் : இருக்கின்ற சிற்பிக்குள்

சிரிக்குது முத்துக்கள்

ஆண் : கண் மீன்கள் தாலாட்டுதே

பெண் : விண்மீன்கள் பாராட்டுதே

பெண் : சின்னச்சின்ன கண்ணுக்குள்ளே

என்னை அள்ளி வைக்கட்டுமா...

Prakash 31

ஆண் : இந்த பூமிக்குள்ளே தங்கம் இருக்கு

இந்த பூவைக்குள்ளே என்ன இருக்கு

பெண் : என்னென்னமோ ஆசை இருக்கு

மண மேடை கட்டும் சொந்தம் உனக்கு

ஆண் : இமைகளை திறந்தால்

அனைத்திலும் உனது

எழில் முகம் சிரிக்கிறது

பெண் : உதட்டில் உனது பெயர்களை

விதித்தால் உணர்ச்சிகள் பூக்கிறதே

ஆண் : இல மனம் பொங்கட்டும்

சுகங்களும் தங்கட்டும்

பெண் : நீ பாடும் சந்தங்களே

முதல் மூன்று சங்கங்களே ..

ஆண் : சின்ன சின்ன கண்ணுக்குள்ளே

பெண் : ம் ..

ஆண் : என்னை அள்ளி வைக்கட்டுமா

பெண் : ம் ..மெல்ல மெல்ல நெஞ்சுக்குள்ளே

என் மனதை தைக்கட்டுமா

ஆண் : அந்த மேகக் கூட்டத்தை போர்வையாக்கி

உன் மேனி போர்த்தி விடவா

பெண் : அந்த மூன்று கடல்களும் மோது மலைக்கு

உன் பெயரை வைத்து விடவா

ஆண் : உனது அழகை கண்டு

அலைகள் துள்ளி வந்து

உறவாட என்னை கெஞ்சுதே

பெண் : எனது உயிரில் வந்து

இணைந்து உன்னை கண்டு

இளங்காற்று முத்தம் கொஞ்சுதே

ஆண் : சின்ன சின்ன கண்ணுக்குள்ளே

பெண் : ஹான் ஹா

ஆண் : என்னை அள்ளி வைக்கட்டுமா

பெண் : ஓ ..மெல்ல மெல்ல நெஞ்சுக்குள்ளே

என் மனதை தைக்கட்டுமா ..

Presented by Prakash 31