menu-iconlogo
logo

oru devathai vanthuvittal

logo
เนื้อเพลง
ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வந்ந மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க

நூலில் பூவை போல சேர்ந்திருக்க

தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க

சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க

புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வந்ந மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

பூக்கும் செடியை எல்லாம்

சிரிக்கும் பூவை எல்லாம்

உன் பெயரை கேட்டு இருந்தார்

எட்டு திசையும் சேர்த்து

ஒற்றை திசையை மாற்றி

உன் வரவாய் பார்த்திருந்தார்

கண்ணுகுள் கண்ணுகுள் உன்னை வைத்து

நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து

உள்ளதை உள்ளதை அள்ளி தந்து

உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து

உன் நிழலில் வாழ்ந்திருக்க

உன் உயிரில் சேர்ந்திருக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வந்ந மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

கொஞ்சும் கிளியே உன்னை

நெஞ்சில் உறங்கசொல்லி

தென்றல் என்னும் பாட் டிசைப்பார்

நெஞ்சம் நோகும் என்றால்

மேகம் கொண்டு வந்து

மெத்தை செய்து பூ விரிப்பார்

வானத்து வானத்து நட்சத்திரம்

வாசலில் வாசலில் புள்ளி வைக்க

வானவில் வானவில் கொண்டு வந்து

வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க

உள்ளங்கையில் பச்சை குத்தி

உன் பெயரை உச்சரிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க

நூலில் பூவை போல சேர்ந்திரிக்க

தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க

சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க

புன்னகையில் பூ பறிக்க

ஒரு தேவதை வந்து விட்டாள் உன்னை தேடிய

வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

oru devathai vanthuvittal โดย S. A. Rajkumar – เนื้อเพลง & คัฟเวอร์