செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னைக் காணாட்டா – இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா? இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
தென்னமர தோப்பினிலே தேங்காய பறிச்சிகிட்டு
தென்னமர தோப்பினிலே தேங்காய பறிச்சிகிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நாங்கள் தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ எளநீர எடுத்துகிட்டு
எங்க குற கேட்டுபுட்டு
எளநீர எடுத்துகிட்டு
எங்க குற கேட்டுபுட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா
நல்ல வழிதனையே காட்டிவிடு மாரியாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
பசும்பால கறந்துகிட்டு
கறந்த பால எடுத்துகிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம்
மாரியாத்தா.. நீ பாம்பாக மாறி....
நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்துவிட்டு
தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று
சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா – எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
ஆதிசக்தி மாதா! கருமாரி மாதா!
எங்கள் ஆதிசக்தி மாதா! கருமாரி மாதா!
நன்றி Very Much! Superbb Singing!
என்றும் அன்புடன் உங்கள் Paramaa