menu-iconlogo
huatong
huatong
avatar

ENNA ENNA VAARTHAIGALO என்ன என்ன வார்த்தை

பி.சுசீலாhuatong
ncschauderhuatong
Lyrics
Recordings

Thanks to Innisaimettukkal

தமிழ் வரிகளில் பதிவேற்றித்

படம்; வெண்ணிற ஆடை

என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்து விட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

ஆஹாஹ்ஹா...

ஆஹாஹ்ஹா ...

ஆஹாஹ்ஹா...

ஓஹோஹ்ஹோ ஒஹோ

ஓ..ஓஹ்ஹஹோஓ

உன்னைத்தா..ன் கண்டு சிரித்தேன்

நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்

உன்னைத்தா...ன் கண்டு சிரித்தேன்

நெஞ்சில் ஏதோ ஏதோ நினைத்தேன்

என்னைத்தா..ன் எண்ணித் துடித்தேன்

எண்ணம் ஏனோ ஏனோ வளர்த்தேன்

பெண்மைப் பூ..வாகுமா இல்லை நா..ளாகுமா

இது தே...னோடு பா...லாகுமா

என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

ஆஹாஹ்ஹா...

ஆஹாஹ்ஹா ...

ஆஹாஹ்ஹா...

ஓஹோஹ்ஹோ ஒஹோ

ஓ..ஓஹ்ஹஹோஓ

நிலவே உன்னை அறிவேன்

அங்கே நேரே ஓர்நாள் வருவேன்

நிலவே உன்னை அறிவேன்

அங்கே நேரே ஓர்நாள் வருவேன்

மலர்ந்தால் அங்கு மலர்வேன்

இல்லைப் பனிபோல் நானும் மறைவேன்

இன்னும் நான் என்பதா உன்னை நீ என்பதா

இல்லை நாம் என்று பேர் சொல்வதா

என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

என்ன என்ன வார்த்தைகளோ

சின்ன விழிப் பார்வையிலே

சொல்லிச் சொல்லி முடித்துவிட்டேன்

சொன்ன கதை புரியவில்லை

More From பி.சுசீலா

See alllogo